முகப்பு /செய்தி /விளையாட்டு / இன்ஸ்டாகிராமில் கங்குலியை அன்-ஃபாலோ செய்த விராட் கோலி… நேரடியாக முற்றுகிறது மோதல்…

இன்ஸ்டாகிராமில் கங்குலியை அன்-ஃபாலோ செய்த விராட் கோலி… நேரடியாக முற்றுகிறது மோதல்…

விராட் கோலி - சவுரவ் கங்குலி

விராட் கோலி - சவுரவ் கங்குலி

கங்குலி இயக்குனராகவும், ரிக்கி பான்டிங் பயிற்சியாளராகவும் இருக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில், விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ யின் முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலியை விராட் கோலி இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்துள்ளார். பெங்களூரு – டெல்லி இடையிலான மேட்ச்சிற்கு பின்னர் கங்குலியுடன் கை குலுக்குவதை (Hand Shake)தவிர்த்த விராட் கோலி தற்போது சமூக வலைதளத்தில் கங்குலியை பின் தொடர்வதை நிறுத்தியுள்ளார். இருவருக்கும் இடையே நடந்து வந்த மோதல் வெளிப்படையாக அதிகரித்திருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி கடந்த 2019-ஆம் ஆண்டிலிருந்து 2022-ஆம் ஆண்டு வரை பொறுப்பில் இருந்தார். இந்த காலகட்டத்தின்போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலிக்கும், கங்குலிக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 2021 அக்டோபர் மாதம் டி20க்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்தும், அதன்பின்னர் ஒருநாள் அணிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகினார். இதற்கு கங்குலி கொடுத்த நெருக்கடி அல்லது அவரது நடவடிக்கையே காரணம் என்று கூறப்பட்டது. இதற்கு வலு சேர்க்கும் வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சேட்டன் சர்மா, ஸ்டிங் ஆபரேஷனில் கங்குலி – கோலி குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக இருவரும் இணைந்து நிற்கும் அல்லது சந்திக்கும் புகைப்படங்கள் ஏதும் வெளியாகாத நிலையில், டெல்லி அணிக்கு எதிராக சமீபத்தில் நடந்த போட்டியின்போது பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இதன்பின்னர் இரு அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் பரஸ்பரம் கை குலுக்கிக் கொண்டனர். அப்போது, கங்குலியுடன் கை குலுக்குவதை விராட் கோலி தவிர்த்துக் கொண்டார். இதுதொடர்பான வீடியோக்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.

top videos

    இந்நிலையில் கங்குலியை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வதை விராட் கோலி தவிர்த்துள்ளார். இருப்பினும் கங்குலி கோலியை ஃபாலோ செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, கங்குலி இயக்குனராகவும், ரிக்கி பான்டிங் பயிற்சியாளராகவும் இருக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில், விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.

    First published:

    Tags: IPL, IPL 2023