முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : இளம் வயது பயிற்சியாளரின் காலை தொட்டு மரியாதை செலுத்திய கோலி… வைரலாகும் வீடியோ

IPL 2023 : இளம் வயது பயிற்சியாளரின் காலை தொட்டு மரியாதை செலுத்திய கோலி… வைரலாகும் வீடியோ

பயிற்சியாளரிடம் ஆசிர்வாதம் பெறும் விராட் கோலி

பயிற்சியாளரிடம் ஆசிர்வாதம் பெறும் விராட் கோலி

பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்பு நடந்த இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது

  • Last Updated :
  • Tamil Nadu, India

தனக்கு இளம் வயதில் பயிற்சி கொடுத்த பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மாவின் காலை தொட்டு கிரிக்கெட் வீரர் விராட் கோலி மரியாதை செலுத்தினார். இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடி வருகிறது. இதில் போட்டி தொடங்குவதற்கு முன்பாக விராட் கோல் வார்ம் அப் பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு இளம் வயதில் பயிற்சி கொடுத்த பயிற்சியாளர் ராஜ் குமார் சர்மா மைதானத்திற்கு வர, அவரது காலை தொட்டு மரியாதை செலுத்தினார் கோலி. பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்பு நடந்த இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை ஐபிஎல் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளது.

top videos

    விராட் கோலி குறித்து ராஜ்குமார் சர்மா கூறுகையில், ’11 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் சிறு வயதில் விராட் கோலி என்னிடம் பயிற்சி எடுத்துக் கொண்டார். அவர் எப்போதும் தனது வயதை உடையவர்களிடம் விளையாட விரும்ப மாட்டார். தன்னை விட சீனியர் வீரர்களிடம் விளையாட அனுமதிக்குமாறு என்னிடம் கேட்பார். அவர்களை தன்னை அவுட் ஆக்க முடியாது என்று அந்த வயதிலேயே கூறுவார். அவரிடம் தன்னம்பிக்கை மிக அதிகம்’ என்று கூறியுள்ளார்.

    First published:

    Tags: IPL, IPL 2023