முகப்பு /செய்தி /விளையாட்டு / தோனியாய் மாறிய கோலி... அதே நாள், அதே ஷாட்.. ரசிகர்களை கவர்ந்த சூப்பர் சிக்ஸ்!

தோனியாய் மாறிய கோலி... அதே நாள், அதே ஷாட்.. ரசிகர்களை கவர்ந்த சூப்பர் சிக்ஸ்!

இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்கள்

இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்கள்

Kohli - Dhoni Sixers | குருவை போல சிஷ்யன் இருப்பதாக ரசிகர்கள் கோலியை புகழ்ந்து வருகின்றனர்.

  • Last Updated :
  • Bangalore, India

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி அடித்த கடைசி சிக்சரையும் தோனி அடித்த சிக்சரை ஒப்பிட்டு மீம்ஸ்களை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தெறிக்க விட்டு வருகின்றனர்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று பெங்களூரு அணி  மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியது. இதில் முதலில்  பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை குவித்தது. இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி – கேப்டன் டூப்ளசிஸ் களத்தில் இறங்கி மும்பை பந்துவீச்சை சிதறடித்தனர்.

முதல் விக்கெட்டிற்கு இருவரும் 148 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். டூப்ளசிஸ் 43 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 6 சிக்சருடன் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய விராட் கோலி 49 பந்துகளில் 6 பவுண்டரி 5 சிக்சருடன் 89ரன்கள் எடுக்க, பெங்களூரு அணி 16.2 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 22 பந்துகளை மீதம் வைத்து வெற்றி இலக்கை எட்டியது.

இதில் விராட் கோலி கடைசியாக அடித்த சிக்சரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இது கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிரான உலகக்கோப்பை இறுதி போட்டியில் கடைசி வின்னிங் ஷாட்டை சிக்சருக்கு தூக்கி அடித்த தோனி, 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு உலகக்கோப்பையை வாங்கி கொடுத்தார். அதேபோல 13ஆண்டுகளுக்கு பிறகு நேற்றைய மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தோனியை போலவே ஷாட் அடித்து வரலாற்றை நினைவுப்படுத்தி தோனியின் ரசிகர் என்பதை நினைப்படுத்தி இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

top videos
    First published:

    Tags: IPL 2023, MS Dhoni, RCB, Virat Kohli