ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கேட்ச் பிடித்து தனது மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு பிளையிங் கிஸ் கொடுத்த விராட் கோலியின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று மாலை பெங்களூரு -ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி போட்டின் முதல் பந்திலே பொல்ட் பந்தில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.
பின்னர் இணைந்த டூப்ளசிஸ் – மேக்ஸ்வெல் இணை அதிரடியாக விளையாடிய அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி முதல் ஓவரிலே பட்லரை சிராஜ் ஆவுட்டாக்கினார். பின்னர் ஜெஸ்வால் மற்றும் படிக்கல் ஜோடி ராஜஸ்தான் அணியை வெற்றி பாதையை நோக்கி அழைத்து சென்றனர்.
Virat kohli flying kiss to anushka pic.twitter.com/8wXpdrUIa1
— Mohit (@cricmohit01) April 23, 2023
13வது ஓவரை வீசிய ஹர்ஷல் பட்டேல் பந்தை ஜேஸ்வால் லெக் சைடு தூக்கி அடித்த பந்தை கேப்டன் விராட் கோலி எந்த ஒரு சலனமின்றி எளிதாக கேட்ச் பிடித்தார். அப்போழுது மைதானத்திற்கு போட்டியை பார்க்க வந்த தனது மனைவி அனுஷ்கா சர்மாவை பார்த்து விராட் கோலி பிளையிங் கிஸ் கொடுத்தார்.
இதையும் படிங்க: போராடி அவுட்டான அஸ்வின்... அப்பாவுக்காக தேம்பித் தேம்பி அழுத மகள்...!
அதனை பார்த்த அவரது அனுஷ்கா சர்மா வெட்கத்தில் முகம் சிவக்க மைதானமே ஆரவாரம் ஆனது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடைசி இரண்டு போட்டிகளிலும் விராட் கோலி தலைமையில் பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anushka Sharma, IPL 2023, Rajasthan Royals, RCB, Virat Kohli