விராட் கோலி அவர் மனைவி அனுஷ்கா சர்மாவுடன் பஞ்சாபி பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி மைதானத்திலும் சரி பொது வெளியிலும் சரி எது செய்தாலும் அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது வழக்கம். நேற்றைய போட்டியில் கூட ஜேஸ்வால் லெக் சைடு தூக்கி அடித்த பந்தை கேட்ச் பிடித்து தனது மனைவி அனுஷ்கா சர்மாவை பார்த்து விராட் கோலி பிளையிங் கிஸ் கொடுத்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Virat Kohli and Anushka Sharma dancing on a Punjabi song.
Video of the day! pic.twitter.com/dzPIeMs8G0
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 24, 2023
அதனை ரசிகர்கள் ஷேர் செய்த நிலையில் தற்போது ஜிம்மில் விராட் கோலி - அனுஷ்கா சர்மாவுடன் பஞ்சாபி பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நடனம் ஆடியபோது தனது கால் சுளுக்கியது. அதனை பார்த்த அவரது மனைவி அனுஷ்கா சர்மா சிரிக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anushka Sharma, IPL 2023, Viral Video, Virat Kohli