முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 | RR vs LSG ட்ரெண்ட் போல்ட்டின் முதல் இரண்டு ஓவர்கள்... கடுப்பில் மும்பை அணி ரசிகர்கள்..!

IPL 2023 | RR vs LSG ட்ரெண்ட் போல்ட்டின் முதல் இரண்டு ஓவர்கள்... கடுப்பில் மும்பை அணி ரசிகர்கள்..!

ட்ரெண்ட் போல்ட்

ட்ரெண்ட் போல்ட்

மும்பை அணிக்கு விளையாடி வந்த ட்ரெண்ட் போல்டை ராஜஸ்தான் அணி 2022ஆம் ஆண்டு 8 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

  • Last Updated :
  • Jaipur, India

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் பலபரிட்சை நடத்தி வருகிறது.

முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங்கை தேர்வு செய்வதாக அறிவித்தார். அப்போது லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுலுக்கு முதல் ஓவரை வீசினார் ட்ரெண்ட் போல்ட். முதல் ஓவர் முழுவதும் மெய்டன் ஓவரானது.

பின்னர் சந்தீப் சர்மா ஓவரில் 12 ரன்களை லக்னோ அணி எடுத்தது. மீண்டும் 3வது ஓவரை கைல் மேயர்ஸ்ற்கு வீசிய ட்ரெண்ட் போல்ட், 2ஆவது பந்தில் மட்டும் 2 ரன்களை விட்டுக்கொடுத்தார். அடுத்த நான்கு பந்துகளில் ஒரு ரன்னை கூட ட்ரெண்ட் போல்ட் விட்டுக்கொடுக்கவில்லை.

இப்படி அதிரடியாக பவுலிங் செய்யும் ட்ரெண்ட் போல்ட், இதற்கு முன்னர் மும்பை அணியில் விளையாடினார். இவரை கடந்த 2022ஆம் ஆண்டு ஐபிஎல்லில் ராஜஸ்தான் அணி 8 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இவர் மும்பை அணியில் இருந்த போது, போல்ட் மற்றும் பும்ரா ஒரு ‘கடப்பாரை’ பவுலிங் காம்பினேஷனை வைத்திருந்தனர்.

top videos

    இப்படி அதிரடியான பவுலரை அணியில் எடுக்காதது அப்போதே ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தது. தற்போது இவரின் இந்த அதிரடியான பவுலிங்கை பார்த்த பிறகு, சமூக வலைதளங்களில் தங்களது சோகத்தை பகிர்ந்து வருகிறார்கள்.

    First published:

    Tags: IPL 2023, Lucknow Super Giants, Rajasthan Royals