முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : ‘பும்ரா இடத்தை நிரப்ப இவரால் முடியும்’ - இளம் வீரரைப் பாராட்டும் ஆர்.பி. சிங்

IPL 2023 : ‘பும்ரா இடத்தை நிரப்ப இவரால் முடியும்’ - இளம் வீரரைப் பாராட்டும் ஆர்.பி. சிங்

ஷமி - பும்ரா

ஷமி - பும்ரா

காயம் காரணமாக பும்ரா கடந்த 9 மாதங்களாக ஓய்வில் இருக்கிறார். பும்ரா இடம்பெறாத நிலையிலும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய அணியின் வேகப்பந்து  வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக ஓய்வில் இருந்து வரும் நிலையில், அவரது இடத்தை இளம் வீரர் ஒருவால் முடியும் என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி. சிங் கூறியுள்ளார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியின் தவிர்க்க முடியாத வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் ஜஸ்பிரித் பும்ரா. மணிக்கு சராசரியாக 145 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் பும்ரா யார்க்கர் பந்துகளை சர்வ சாதாரணமாக வீசி எதிரணி வீரர்களை திணறடிப்பார்.

காயம் காரணமாக பும்ரா கடந்த 9 மாதங்களாக ஓய்வில் இருக்கிறார். பும்ரா இடம்பெறாத நிலையிலும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இருப்பினும், பும்ரா இருந்தால் அது இந்திய அணிக்கு கூடுதல் பலமாகவே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பும்ராவுக்கு மாற்று வீரராக சிராஜ் இருப்பார் என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி. சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

top videos

    சிராஜை நான் நீண்ட காலமாக கவனித்து வருகிறேன். அவர் இந்திய அணியில் இணைந்தபோது பர்ஃபார்மென்ஸ் உச்சத்தில் இருந்தது. பின்னர் சற்று இறங்கி அவர் கடும் விமர்சனங்களுக்கு ஆளானர். தொடர்ந்து அதிலிருந்து மீண்டு மீண்டும் உச்சத்திற்கு சென்றுள்ளார். நல்ல வேகத்தில் ஸ்டெம்ப்பை நோக்கி அற்புதமாக பந்து வீசுகிறார் சிராஜ். அவரால் பும்ராவின் இடத்தை நிரப்ப முடியும். தற்போது அவருடைய ஆட்டம் நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது. ஷமியின் இடத்தையும் சிராஜ் நிரப்புவார். இவ்வாறு அவர் கூறியுள்ளார். பும்ராவைப் போன்று இந்திய அணியின் அனைத்து ஃபார்மேட் மேட்ச்சுகளிலும் சிராஜ் விளையாடி வருகிறார். இந்திய அணி அடுத்து விளையாடவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஒருநாள் தொடரில் சிராஜின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    First published:

    Tags: IPL, IPL 2023