முகப்பு /செய்தி /விளையாட்டு / சொந்த வீடு இது.. சென்னை மைதானத்தில் ரெய்னா.. ஆரவாரம் செய்த சிஎஸ்கே ரசிகர்கள்...!

சொந்த வீடு இது.. சென்னை மைதானத்தில் ரெய்னா.. ஆரவாரம் செய்த சிஎஸ்கே ரசிகர்கள்...!

சேப்பாக்கத்தில் உத்தப்பா மற்றும் ரெய்னா

சேப்பாக்கத்தில் உத்தப்பா மற்றும் ரெய்னா

Suresh Raina in Chennai chepauk | முதன் முறையாக சுரேஷ் ரெய்னா இல்லாமல் சென்னை அணி சேப்பாக்கத்தில் களமிறங்குகிறது.

  • Last Updated :
  • Chennai, India

லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியை கான முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவை பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

16வது ஐபிஎல் தொடர் கடந்த 31ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் மட்டும் சென்னை அணி 7 போட்டிகளில் விளையாட உள்ளது. 4 ஆண்டுகளுக்கு பின் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி களமிறங்கும் போது சின்ன தல சுரேஷ் ரெய்னா அணியில் இல்லை என்று ரசிகர்கள் சோகத்தை வெளிப்படுத்தி அவருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் சென்னை - லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டியை காண சுரேஷ் ரெய்னா நேரில் வந்துள்ளார். சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்த சுரேஷ் ரெய்னாவை பார்த்த ரசிகர்கள் விண்ணை பிளக்கும் அளவுக்கு சத்தமிட்டனர்.

இதையும் படிங்க: ஐபிஎல் 2023: மும்பை 5.. சென்னை 4.. நாங்கள் 8 முறை... கோலி சொன்ன நச் பதில்..!

இதுகுறித்து சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில், சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்திருப்பது சொந்த வீட்டிற்குள் வந்த உணர்வை கொடுக்கிறது என்றும் இந்த வாழ்வில் அடைந்த வெற்றிகள், தோல்விகள் என அத்தனை விஷயங்களையும் சேப்பாக்கம் கண்டிருக்கிறது. என் இதயம் எங்கே இருக்க வேண்டுமோ, அங்கு வந்துருக்கிறேன் என்று சென்னை முன்னாள் வீரர் ராபின் உத்தப்பாவுடன் இருக்கும் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

top videos

    மேலும் சென்னை அணி வீரர்களுடன் சந்தித்து பேசிய ரெய்னா மைதானத்தில் போட்டிக்கு முன் ருதுராஜ் கெய்க்வாட்டிம் சில டிப்ஸ்களை வழங்கினார்.

    First published:

    Tags: Chennai, IPL 2023, Suresh Raina