முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘ப்ளீஸ் ரோஹித் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க..!’- சுனில் கவாஸ்கர் அட்வைஸ்

‘ப்ளீஸ் ரோஹித் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க..!’- சுனில் கவாஸ்கர் அட்வைஸ்

ரோகித் சர்மா

ரோகித் சர்மா

Sunil Gavaskar Advice | ரோகித் சர்மா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு தன்னை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க வேண்டும் என சுனில் கவஸ்கார் கூறியுள்ளார்.

  • Last Updated :
  • Mumbai, India

ஐபிஎல் தொடரில் இருந்து விலகி ஓய்வு எடுத்துவிட்டு  வாருங்கள் என கேப்டன் ரோகித் சர்மாவுக்கு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அறிவுரை வழங்கியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் மும்பை - குஜராத் அணிகள் மோதின. இதில் முதலில் களமிறங்கிய குஜராத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது. 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் மட்டுமே தோல்வியை தழுவியது. குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா 8 பந்துகளில் 2 ரன்களை மட்டுமே எடுத்து ஹர்திக் பாண்ட்யா பந்தில் அவுட்டானர்.

இதனால் ரோகித் சர்மா மீது கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கடுமையாக சாடி வருகின்றனர். தொடர்ந்து ரோகித் சர்மா பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். இந்தாண்டு ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் 181 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். அவரின் சரசரி 25.86ஆக உள்ளது அவரின் ஸ்ரைக் ரேட்டும் 135.07 ஆக உள்ளது. இப்படி மோசமான ஃபார்மை வைத்து எப்படி இங்கிலாந்தில் நடைபெறும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியஷிப் போட்டியை வெல்ல முடியும் எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார். அதில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா சிறிது ஓய்வெடுத்து, ஐபிஎல் 2023க்குப் பிறகு நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு புதிதாக திரும்ப வேண்டும் ரோகித் சர்மாவுக்கு தற்போது கொஞ்சம் ஓய்வு தேவை என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அறிவுரைன் வழங்கியுள்ளார்.

top videos

    தற்போது மீதமுள்ள ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு எடுத்துவிட்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு தன்னை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க வேண்டும். கடந்த சில போட்டிகளுக்கு மீண்டும் வாருங்கள், ஆனால் இப்போது ஒரு மூச்சு விடுங்கள். அவர் சற்று ஆர்வத்துடன் இருக்கிறார், ஒருவேளை அவர்  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி பற்றி யோசித்துக் கொண்டிருக்கலாம். அவருக்கு கொஞ்சம் ஓய்வு தேவை என்று நினைக்கிறேன் என சுனில் கவஸ்கார் கூறியுள்ளார்.

    First published:

    Tags: ICC World Test Championship, IPL 2023, Mumbai Indians, Rohit Sharma, Sunil Gavaskar