முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘காரை கவனமாக ஓட்டுங்க…’ – 3 ஆண்டுகளுக்கு முன்பே ரிஷப் பந்த்திற்கு அட்வைஸ் செய்த ஷிகர் தவான்…

‘காரை கவனமாக ஓட்டுங்க…’ – 3 ஆண்டுகளுக்கு முன்பே ரிஷப் பந்த்திற்கு அட்வைஸ் செய்த ஷிகர் தவான்…

ஷிகர் தவான் - ரிஷப் பந்த்

ஷிகர் தவான் - ரிஷப் பந்த்

ஒருமுறை நான் அவர் கார் ஓட்டுவதைப் பார்த்தேன். அதன்பின்னர்தான் அவரிடம் காரை கவனமாக ஓட்டு என்று கூறினேன். – தவான்

  • Last Updated :
  • Tamil Nadu, India

கார் விபத்தில் சிக்கி இந்திய அணியின் ரிஷப் பந்த் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பே சக வீரரான ஷிகர் தவான் காரை மெதுவாக ஓட்டும்படி அறிவுறுத்தியுள்ளார். அதுதொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.  இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர்களாக சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், கே.எல், ராகுல் ஆகியோர் இருந்தாலும் அவர்களில் ரிஷப் பந்த் தனது தொடர்ச்சியான அதிரடி ஆட்டங்கள் மற்றும் ரன் குவிப்பால் தனக்கென ஒரு இடத்தை அணியில் பிடித்துள்ளார்.

எதிர்பாராத விதமாக கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி ரிஷப் பந்த் கார் விபத்தில் சிக்கிக்கொண்டார். தலைநகர் டெல்லியில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கிக்கு அவர் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ரிஷப் பந்த் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். காயம் முழுமையாக குணம் அடையாத நிலையில், அவர் இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி அடுத்து விளையாடக்கூடிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடர் ஆகியவற்றிலும் ரிஷப் பந்த் இடம்பெற மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

top videos

    இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்பே ரிஷப் பந்திற்கு கவனமாக கார் ஓட்டுமாறு சக விரர் ஷிகர் தவான் அட்வைஸ் செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. வீடியோவில் ஒரேயொரு அட்வைஸ் எனக்கு செய்யுங்கள் என்று பந்த் கேட்க, உனது காரை கவனமாக ஓட்டு என்று பதில் அளிக்கிறார் தவான். இந்த வீடியோ குறித்த தவான் கூறியதாவது- முதலில் கார் விபத்தில் ரிஷப் பந்த் காப்பாற்றப்பட்டு உயிருடன் இருக்கிறார் என்கிற விஷயம் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் அவருடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன். ஒருமுறை நான் அவர் கார் ஓட்டுவதைப் பார்த்தேன். அதன்பின்னர்தான் அவரிடம் காரை கவனமாக ஓட்டு என்று கூறினேன். இந்த வீடியோ எப்போது வைரலானது என்று எனக்கு தெரியவில்லை. 20-21 வயதில் நான் உள்பட எல்லோருமே கொஞ்சம் வேகமாகத்தான் காரை ஓட்டியிருப்போம். ஆனால் கவனம் அதிகம் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    First published:

    Tags: Cricket