முகப்பு /செய்தி /விளையாட்டு / விளம்பரங்களில் எனது பெயரை பயன்படுத்துகிறார்கள் - சச்சின் டெண்டுல்கர் காவல்துறையில் புகார்..

விளம்பரங்களில் எனது பெயரை பயன்படுத்துகிறார்கள் - சச்சின் டெண்டுல்கர் காவல்துறையில் புகார்..

சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர்

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி இணையதளத்தில் போலி விளம்பரம் என சச்சின் டெண்டுல்கர் புகாரளித்துள்ளார்.

  • Last Updated :
  • Mumbai, India

தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்தி போலி விளம்பரம் வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மும்பை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கரின் புகைப்படம் மற்றும் அவரது குரலை பயன்படுத்தி இணையதளத்தில் போலி விளம்பரம் வெளியிட்டு அவர்களின் பொருட்களை வாங்கச்சொல்வதாக தகவல்கள் வெளியாகின.

இது தொடர்பாக, மும்பை குற்றப்பிரிவில் சச்சின் டெண்டுல்கர் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், 426, 465 மற்றும் 500 என 3 பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சமூகவலைதளங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருவதாகவும் மும்பை சைபர் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

top videos
    First published:

    Tags: Advertisement, Cyber crime, Mumbai, Sachin Tendulkar