முகப்பு /செய்தி /விளையாட்டு / தொடர்ந்து 5 ஆவது முறையாக ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்த ரோஹித் சர்மா… ரசிகர்கள் அதிர்ச்சி

தொடர்ந்து 5 ஆவது முறையாக ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்த ரோஹித் சர்மா… ரசிகர்கள் அதிர்ச்சி

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா ரன்களை எடுக்க தவறினாலும் அவரது அணியில் இடம்பெற்றுள்ள மற்ற பேட்ஸ்மேன்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பெற வைத்து விடுகின்றனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தொடர்ந்து 5 ஆவது முறையாக ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்துள்ளார். இந்த மோசமான சாதனையை ஐபிஎல்-ல் ஏற்படுத்தியுள்ள முதல் வீரராக அவர் மாறியுள்ளார். ரோஹித்தின் ஆட்டம் தொடர்ந்து கவலையளிக்கும் விதத்தில் உள்ள நிலையில் அவர் எப்போது ஃபார்முக்கு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட்டு வருகிறார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அடுத்த மாதமும், அதன்பின்னர் ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் உள்ளிட்ட முக்கிய ஆட்டங்கள் வரிசையில் உள்ளன. இந்நிலையில் ரோஹித் ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது மும்பை  அணியின் ரசிகர்களை மட்டுமல்லாமல் இந்திய அணியின் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர் கடந்த 5 இன்னிங்ஸ்களில் 2, 3, 0, 0, 7 என ஒற்றை இலக்கத்தில் ரன்களை எடுத்து ஆட்டமிழந்துள்ளார்.

ரோஹித் சர்மா ரன்களை எடுக்க தவறினாலும் அவரது அணியில் இடம்பெற்றுள்ள மற்ற பேட்ஸ்மேன்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பெற வைத்து விடுகின்றனர். நேற்று பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங்கை தொடர்ந்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 199 ரன்கள் எடுக்க, அடுத்து பேட்டிங் செய்த மும்பை அணி 16.3 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. மும்பை அணியின் சூர்ய குமார் யாதவ் 83 ரன்களும், நெஹல் வதேரா 52 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 11 போட்டிகளில் 6 இல் வெற்றி பெற்று மும்பை அணி 3 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

First published:

Tags: IPL, IPL 2023