முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : இந்த ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறுகிறாரா தோனி? வைரலாகும் ரோஹித் சர்மாவின் பதில்

IPL 2023 : இந்த ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறுகிறாரா தோனி? வைரலாகும் ரோஹித் சர்மாவின் பதில்

தோனி - விராட் கோலி

தோனி - விராட் கோலி

முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன

  • Last Updated :
  • Tamil Nadu, India

நடப்பு ஐபிஎல் தொடருடன் தோனி ஓய்வு பெறுகிறாரா என்பது குறித்து ரோஹித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் அளித்துள்ள பதில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை அகமதாபாத்தில் கோலகலமாக தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த தொடரை வெற்றியுடன் சென்னை அணி தொடங்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற ரோஹித் சர்மாவிடம், இந்த ஐபிஎல் தொடருடன் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறுவார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு ரோஹித் சர்மா அளித்த பதிலில் கூறியிருப்பதாவது- இந்த கேள்வியை நான் 2-3 ஆண்டுகளாக எதிர்கொண்டு வருகிறேன். இதுதான் தோனியின் கடைசி ஐபிஎல் போட்டியா என 2-3 ஆண்டுகளாகவே என்னிடம் கேட்டு வருகிறார்கள். அவர் நல்ல ஃபிட்டாக இருக்கிறார். அவரால் இன்னும் சில சீசன்களில் விளையாட முடியும். இந்த சீசனில் மும்பை அணி வழக்கம்போல வலிமையாக இருக்கிறது. கடந்த முறை நாங்கள் தோல்வியில் இருந்து பாடங்களை கற்றுக் கொண்டோம். அவை இந்த சீசனில் எங்களுக்கு பயன்படும். ஆரம்பத்திலேயே வெற்றிகளைக் குவிக்க நாங்கள் முயற்சி மேற்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

top videos

    தோனி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரியான் பராக் கூறுகையில் ‘தோனி போன்ற ஃபினிஷரை நம்மால் எங்கும் பார்க்க முடியாது. மேட்ச்சை வெற்றிகரமாக முடிப்பதில் அவரை விட சிறந்த வீரர் யாரும் கிரிக்கெட்டில் இல்லை. அணி என்னை எந்த இடத்தில் களம் இறங்க கேட்டுக் கொண்டாலும் அதில் இறங்கி சிறப்பாக விளையாடுவேன். அணிக்கு என்னுடைய பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக அணியில் என்னுடை வேலை மேட்ச்சை ஃபினிஷ் செய்வதாகத்தான் இருந்து வருகிறது.’ இவ்வாறு அவர் கூறினார்.

    First published:

    Tags: IPL, IPL 2023