சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு கிடைப்பதை போல மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மாவிற்கு பாராட்டுகள் கிடைப்பதில்லை என முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில், மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோ அணியை வீழ்த்தியது. அப்போட்டியில் இளம் வீரரான ஆகாஷ் மதிவால் 5 விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு உதவினார்.
இப்போட்டி குறித்து பேசிய சுனில் கவாஸ்கர், ‘மதிவால் ஓவர் த விக்கெட்டிலிருந்து வந்து பதோனி விக்கெட்டை வீழ்த்தினார். ரவுண்ட் த விக்கெட்டிலிருந்து வந்து நிக்கோலஸ் பூரணின் விக்கெட்டை வீழ்த்தினார்.
இதை அனைத்து பவுலர்களும் செய்ய மாட்டார்கள். அவர்களுக்கு எப்படி பந்து வீசினால் விக்கெட்டுகள் கிடைக்கிறதோ, அப்படியே தான் பந்து வீச நினைப்பார்கள். ஆனால் அரௌண்ட் த விக்கெட்டில் சென்று பந்து வீசி, பூரணின் விக்கெட்டை வீழ்த்தினார்.
துஷார் தேஷ்பாண்டே, அஜிங்கியா ரஹானே, ஷிவம் தூபே உள்ளிட்டோர்களின் திறமைகளை வெளிகொண்டு வந்ததற்காக தோனியை கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடுகிறார்கள். மதிவால் இதே ஆட்டத்தை தோனியின் தலைமையின் கீழ் செய்திருந்தால், உலகமே அவரின் கேப்டன்சியை கொண்டாடியிருக்கும்.
இதையும் படிக்க : சேவாக்கை விஞ்சிய ஷுப்மன் கில்.. நேற்றைய போட்டியில் முறியடித்த 6 சாதனைகள்..
மேலும் பேட்டிங் செய்யும் போது வதேராவை ரோகித் சர்மா இம்பாக்ட் பிளேயராக பயன்படுத்தினார். முதலில் பேட்டிங் செய்யும் போது, ஒரு பேட்ஸ்மேனை அந்த அணி இம்பாக்ட் பிளேயராக பயன்படுத்தாது. ஆனால் ரோகித் சர்மா பயன்படுத்தினார்.
இதெல்லாம் தோனி செய்திருந்தால் அவரால் தான் வெற்றி பெற்றது, அவரின் உத்தியால் தான் விக்கெட் எடுக்க முடிந்தது என பலரும் கூறியிருப்பார்கள். சில நேரங்களில் அப்படி நடக்கலாம். ஆனால் தோனிக்கு கிடைத்த அளவிற்கு ரோகித் சர்மாவிற்கு புகழ் கிடைக்கவில்லை என்றே கூறவேண்டும் என தெரிவித்தார். சுனில் கவாஸ்கரின் இந்த கருத்து பலரின் ஆதரவையும் விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IPL 2023, MS Dhoni, Rohit Sharma, Sunil Gavaskar