முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘என்னுடைய ஐபிஎல் சாதனையை இவரால் மட்டுமே முறியடிக்க முடியும்’ – கிறிஸ் கேல்

‘என்னுடைய ஐபிஎல் சாதனையை இவரால் மட்டுமே முறியடிக்க முடியும்’ – கிறிஸ் கேல்

கிறிஸ் கேல்

கிறிஸ் கேல்

குறிப்பாக 15 - 20 ஓவர்கள் அவர் களத்தில் நின்றால் அவரால் மிகப்பெரிய ஸ்கோரை எளிதாக எடுக்க முடியும் – கிறிஸ் கேல்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தனது சாதனையை இந்த இந்திய பேட்ஸ்மேனால் மட்டுமே முறியடிக்க முடியும் என்று ரன் குவிக்க திணறி வரும் வீரர் ஒருவரை கிறிஸ் கேல் சுட்டிக் காட்டியுள்ளார். தனது அதிரடி ஆட்டத்தால் ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தவர் கிறிஸ் கேல். சிங்கிள் ரன் எடுப்பதைப் போன்று கிறிஸ் கேல் சர்வ சாதாரணமாக சிக்சர் அடித்த சம்பவங்கள், ஐபிஎல் வரலாற்றில் இடம்பெற்றுள்ளன. 2013-ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்.சி.பி. அணியில் இருந்த கிறிஸ் கேல் 175 ரன்களை குவித்தார்.

இந்த சாதனை சுமார் 10 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் யார் இந்த சாதனையை முறியடிப்பார் என்பது குறித்து ஜியோ சினிமா நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கிறிஸ் கேல் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது- என்னைப் பொருத்தளவில் ஐபிஎல் தொடரில் 175 ரன் என்ற தனிநபர் அதிகபட்ச சாதனையை கே.எல்.ராகுல்தான் முறியடிப்பார் என்று நினைக்கிறேன். அவரால் மிகவும் அபாயகரமாக விளையாட முடியும்.

கே.எல்.ராகுல்

அவரால் பெரிய ஸ்கோர்கள் அடிக்க முடியாது என்று சிலர் கூறுகின்றனர். அதனை நான் நம்பவில்லை. அவருடைய ரன் குவிப்பை ஐபிஎல் தொடரில் எதிர்பார்க்கிறேன். நிச்சயமாக அவரால் தான் என்னுடைய சாதனையை முறியடிக்க முடியும். குறிப்பாக 15 - 20 ஓவர்கள் அவர் களத்தில் நின்றால் அவரால் மிகப்பெரிய ஸ்கோரை எளிதாக எடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக கே.எல். ராகுல் செயல்படுகிறார். தொடக்க வீரராக அவர் களத்தில் இறங்குவார் என்பதால் கிறிஸ் கேலின் சாதனையை முறிடியக்க அவருக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற ராகுல், மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த விமர்சனங்களுக்கு ஆளானார். ரன்கள் குவிக்க கே.எல். ராகுல் திணறி வரும் நிலையில் அவர்தான் தனது சாதனையை முறியடிப்பார் என்று கிறிஸ் கேல் கூறியுள்ளார்.

First published:

Tags: IPL, IPL 2023