முகப்பு /செய்தி /விளையாட்டு / RRvCSK | சென்னை அணிக்கு எதிரான போட்டி- பேட்டிங்கைத் தேர்வு செய்த ராஜஸ்தான் அணி

RRvCSK | சென்னை அணிக்கு எதிரான போட்டி- பேட்டிங்கைத் தேர்வு செய்த ராஜஸ்தான் அணி

சிஎஸ்கே, ஆர்ஆர்

சிஎஸ்கே, ஆர்ஆர்

சென்னை அணிக்கு எதிரானப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணிந்து பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

  • Last Updated :
  • Rajasthan, India

ஐ.பி.எல் 2023 தொடர் கடந்த மாத இறுதியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. லீக் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் வெற்றி பெறும் முனைப்புடன் தீவிரமாக விளையாடிவருகின்றன. இன்று நடைபெறும் 37-வது போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன. தோனி தலைமையிலான சென்னை அணி 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலின் முதல் உள்ளது.

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 7 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. ஜெய்ப்பூர் மாநிலம் சாவாய் மன்சிங் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

top videos

    யஸ்வந்த் ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் என வலுவான தொடக்க ஆட்டக்காரர்களுடன் களமிறங்கியுள்ளது. அதேபோல, ரூத்ராஜ் கெய்க்வாட், டிவான் கான்வே, அஜிங்கே ரஹானே, ஷிவம் துபே என வலுவான தொடக்க ஆட்டக்காரர்களுடன் களமிறங்குகிறது. எனவே, இந்தப் போட்டி வெகு சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    First published:

    Tags: CSK, IPL 2023, Rajastan