முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : சாம்பியன் பட்டம் வெல்லுமா ராஜஸ்தான் ராய்ல்ஸ்..? பலம் பலவீனம் என்ன?

IPL 2023 : சாம்பியன் பட்டம் வெல்லுமா ராஜஸ்தான் ராய்ல்ஸ்..? பலம் பலவீனம் என்ன?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

Rajasthan Royals | 2008 ஆம் ஆண்டு முதன் முதலாக நடைபெற்ற ஐபிஎல் தொடரை ராஜஸ்தான் அணி அதன்பிறகு ஒரு முறை ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை

  • Last Updated :
  • Tamil Nadu, India

சஞ்சு சாம்சன் தலைமையில் களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடந்த ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டியில் குஜராத் அணியிடன் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தது. கடந்த 2008ம் ஆண்டு முதன் முறையாக நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வாங்கிய ராஜஸ்தான் இதுவரை ஒரு கோப்பையை கூட வென்றதில்லை.

ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லருடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 3ம் இடத்தில் தேவ்தத் படிக்கல்லும், 4ம் இடத்தில் கேப்டன் சஞ்சு சாம்சன்,5ம் இடத்தில் ஷிம்ரான் ஹெட்மயர் என வலுவான பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது ராஜஸ்தான் அணி. குறிப்பாக கடந்த சீசனில் சிறப்பாக விளையாடிய பட்லர் 17 போட்டிகளில் விளையாடி 150 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 863 ரன்களை குவித்தார். அந்த தொடரில் 4 சதங்கள் 4 அரைசதங்கள் அடித்து அசத்தி ஆரஞ்சு தொப்பியை தட்டி சென்றார்.

வேகப்பந்து வீச்சில் பவுலர்களாக டிரெண்ட் போல்ட், குல்தீப் சென் ஆகிய இருவருடன் ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் ஆடுவார். ஸ்பின்னர்களாக அஷ்வின் மற்றும் சாஹல் ஆகிய 2 அனுபவம் வாய்ந்த ஸ்பின்னர்கள் உள்ளதால் ராஜஸ்தான் அணிக்கு கூடுதல் பலம்.கடந்த ஆண்டு சுழல் ஜோடியான அஸ்வின் மற்றும் சாஹல் ஜோடி 17 போட்டிகளில் 39 விக்கெட்களையும் வீழ்த்தி ரன்களையும் கட்டுப்படுத்தினர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விவரம்:

top videos

    சஞ்சு சாம்சன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிம்ரோன் ஹெட்மியர், தேவ்தத் படிக்கல், ஜோஸ் பட்லர், துருவ் ஜூரல், ரியான் பராக், சந்தீப் சர்மா, டிரெண்ட் போல்ட், ஓபேட் மெக்காய், நவ்தீப் சைனி, குல்தீப் சென், குல்திப் யாதவ், ஆர் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், கே.சி. , ஜேசன் ஹோல்டர், டோனோவன் ஃபெரீரா, குணால் ரத்தோர், ஆடம் ஜம்பா, கேஎம் ஆசிஃப், முருகன் அஷ்வின், ஆகாஷ் வஷிஷ்ட், அப்துல் பி ஏ, ஜோ ரூட்.

    First published:

    Tags: IPL 2023, Rajasthan Royals