முகப்பு /செய்தி /விளையாட்டு / CSKVsGT | குருவை வீழ்த்த சிஷியன் போடும் பக்கா ஸ்கெட்ச்.. என்ன செய்யப்போகிறார் தோனி?

CSKVsGT | குருவை வீழ்த்த சிஷியன் போடும் பக்கா ஸ்கெட்ச்.. என்ன செய்யப்போகிறார் தோனி?

தோனி - பாண்டியா

தோனி - பாண்டியா

ஐபிஎல் பிளே - ஆப் சுற்று போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Chennai, India

ஐபிஎல் லீக் போட்டியில் 70 கடுமையான போட்டிகளுக்குப் பிறகு, குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய நான்கு அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த சீசன் ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்பான போட்டிகளே அதிகம் நடந்தன. ஃபாஃப் டு பிளெசிஸ், விராட் கோலி மற்றும் முகமது ஷமி போன்ற மூத்த வீரர்களிடம் இருந்து செம்ம மாஸ் ஆட்டத்தை ரசிகர்கள் கண்டு களித்தாலும் ஷுப்மான் கில், ரிங்கு சிங் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் அடுத்த தலைமுறையின் வருகை வருங்கால இந்திய அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.

இப்படி இருக்க இந்த சீசனில் பிளே ஆப் சுற்றுக்கு நுழைந்துவிடும் என ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த பெங்களூரு அணி இந்த ஆண்டும் அவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. இந்த நிலையில் நாளை நடப்பு சாம்பியன் குஜராத் அணியும் சென்னை அணியும் நாளை குவாலிபாயர்-1 போட்டியில் மோதவுள்ளது. இதுவரை குஜராத் டைட்டன்ஸ் சேப்பாக்கத்தில் விளையாடவில்லை. சென்னை அணி இந்த தொடரில் 7 போட்டியை தனது சொந்த மைதானத்தில் விளையாடி உள்ளது.

குஜராத் அணி பலம்:

ஆஷிஷ் நெஹ்ரா, கேரி கிர்ஸ்டன் மற்றும் விக்ரம் சோலங்கி ஆகிய மூன்று பயிற்சியாளர்கள் இந்த அணிக்கு மிகப்பெரிய பலமாக இருந்து முதல் ஐபிஎல் தொடரை வெல்ல உதவினர். அதுமட்டும் இல்லாமல் இந்த ஆண்டு தொடரில் ஹர்திக் பாண்டியா தனது படைகளை சிறப்பாக வழிநடத்தி 14 போட்டிகளில் 20 புள்ளிகளை பெற்றது. தற்போது இந்திய கிரிக்கெட்டின் பிரின்ஸ் என அழைக்கப்படும் கில் அசுர பார்மில் இருக்கிறார். தமிழ்நாடு வீரர்கள் சாய் சுதர்சன் மற்றும் விஜய் சங்கர் குஜராத் அணிக்கு சிறந்த பங்களிப்பை அளித்து வருகின்றனர்.

மிடில் ஆர்டரில் விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா வலுவாக இருந்தாலும் பினிஸ் செய்ய டேவிட் மில்லர் ராகுல் தேவட்டியா, ரஷித் கான் என சென்னை அணி பந்துவீச்சை மிரட்ட இருக்கிறது குஜராத் படை. பந்துவீச்சில் ஷமி தனது ஸ்விங் பந்துவீச்சால் எதிர் அணியினரை கதிகலங்க செய்துவரும் நிலையில், அதே நேரத்தில் ரஷித் கான் தனது சுழல் பந்துவீச்சால் எதிரணி பேட்டர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி வருகிறார். டெத் ஓவர்களில் மோதி சர்மா முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி தருவது குஜராத் அணிக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தி தருகிறது.

ஷனகாவுக்குப் பதிலாக ஐரிஷ் வீரர் ஜோஷ்வா லிட்டில் மீண்டும் லெவன் அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் யஷ் தயாளுக்குப் பதிலாக சாய் கிஷோர் விளையாட வாய்ப்பு உள்ளது. குஜராத்தைப் பொறுத்தவரை, சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடியது இல்லை என்பதால் அவர்களுக்கு இந்த போட்டி மிக பெரிய சவலாகவே உள்ளது.

சென்னை அணி பலம்:

மறக்க முடியாத ஐபிஎல் 2022க்குப் பிறகு, இந்த ஆண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்ததன் மூலம், இந்த சீசனில் சிஎஸ்கே மீண்டும் பிளே ஆப் முன்னேறியுள்ளது. தோனி இந்த சீசனில் தனது காலில் காயம் ஏற்பட்டபோதிலும் அணியை தனது பாணியில் வழிநடத்தி பிளே ஆப் சுற்றுக்கு நுழைய வைத்துள்ளார். சென்னை அணிக்கு மிகப்பெரிய ஏமாற்றமே பென் ஸ்டோக்ஸை ரூ 16.25 கோடிக்கு வாங்கி காயத்தால் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாட வைத்ததுதான்.

சென்னை அணி பேட்டிங்கை பொறுத்தவரை டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகியோரின் கூட்டு முயற்சிகள் அணிக்கு வெற்றி தேடி தந்தது. அதுமட்டும் இல்லாமல் என்னதான் சென்னை அணி நன்றாக விளையாடினாலும் தோனி களமிறங்க வேண்டும் என ரசிகர்கள் ஆர்பரித்து மைதானங்களை அதிர செய்வது சொல்லவா வேண்டும். இந்த தொடரில் மொயின் அலி மற்றும் அம்பத்தி ராயுடு தனது வழக்கான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் இருப்பதால் மிடில் ஆர்டரில் சற்று திணறி வருகிறது என்று தான் கூற வேண்டும்.

டெவோன் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரின் நல்ல தொடக்கம் முக்கியமானதாக இருக்கும். ஆனால் சேப்பாக்கத்தில், அஜிங்க்யா ரஹானே மற்றொரு அதிரடி இன்னிங்ஸை ஆட வேண்டும். அதே நேரத்தில் சிவம் துபே இந்த சீசனில் 33 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ள நிலையில் மேலும் சிக்ஸர்களை பறக்க விடுவார் என எதிர்பார்ப்பு ரசிகர்களை எகிற வைத்துள்ளது.

பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை மேலும் தீபக் சாஹரின் பவர்பிளே ஓவர்கள் மற்றும் பின் இறுதியில் மதீஷா பத்திரனாவின் ஸ்லிங்கர்களை அவர்கள் எவ்வளவு நன்றாகப் பேசுகிறார்கள் என்பது போட்டியின் முடிவைத் தீர்மானிக்கும். துஷார் தேஷ்பாண்டே மற்றும் ஆகாஷ் சிங் போன்ற புதிய நட்சத்திரங்களிடம் இருந்து இந்த சீசனில் தோனி மற்றும் பயிற்சியாளர் பிரவோ நல்ல பந்துவீச்சை வெளி கொண்டு வர உதவினர்.

அதே நேரத்தில் இலங்கையின் மதீஷா பத்திரனாவுக்கு பிரேக்- அவுட் நட்சத்திரமாக மாறினார். முக்கியமாக வருங்கால வேகப்புயலாக மாறி வரும் பத்திரனா சொந்த மைதானத்தில் பலம் வாய்ந்த குஜராத் அணி பேட்டிங்கை வேகத்தால் மிரட்டினால் கிட்டதட்ட சென்னை அணிக்கு வெற்றி உறுதியாகிவிடும். முதல் தகுதிச் சுற்றில் டைட்டன்ஸை எதிர்கொள்வது சென்னைக்கு கடினமான பணியாக இருந்தாலும் சொந்த மைதானத்தில் சேப்பாக்கத்தில் அவர்களுக்கு பெரிய நம்பிக்கையை கொடுக்கும்.

மைதானம் எப்படி இருக்கும்:

இதுவரை சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக மாறவும் வாய்ப்புள்ளது. சென்னை அணியில் ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி மற்றும் தீக்ஷனா உள்ளிட்டோரும் குஜராத் அணியில் ரஷித் மற்றும் நூர் அகமது உள்ளிட்டோர் சுழலில் மிரட்டுவார்கள். மேலும்  எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடந்த சமீபத்திய ஆட்டங்களில் முதல் இன்னிங்ஸ் சராசரியாக 163 ரன்களை எடுத்தது. மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் அச்சுறுத்தலாம். பனி, ஆட்டத்தின் இறுதி கட்டத்தையும் பாதிக்கும்.

சேஸிங் செய்யும் அணி இந்த சீசனில் நான்கு முறை வென்றிருந்தாலும், அணிகள் பெரும்பாலும் இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்வதன் மூலம் அதிக ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன.  கடந்த மூன்று ஆண்டுகளில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி 56% விக்கெட்டுகளை எடுத்துள்ளனர், மீதமுள்ள 44% விக்கெட்டுகளை ஸ்பின்னர்கள் எடுத்துள்ளனர்.

சென்னை அணியின் ஆடும் லெவன்:

ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, அம்பதி ராயுடு, சிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேப்டன்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா

குஜராத் அணியின் ஆடும் லெவன்:

top videos

    ஷுப்மான் கில், விருத்திமான் சாஹா , ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தசுன் ஷனகா, டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், மோகித் சர்மா, நூர் அகமது, முகமது ஷமி, யாஷ் தயாள்

    First published:

    Tags: CSK, Gujarat Titans, IPL 2023