முகப்பு /செய்தி /விளையாட்டு / பனுக்கா - தவான் ஜோடி அதிரடி: கொல்கத்தா அணிக்கு 192 ரன்கள் இலக்கு..

பனுக்கா - தவான் ஜோடி அதிரடி: கொல்கத்தா அணிக்கு 192 ரன்கள் இலக்கு..

தவான் - பானுக்க

தவான் - பானுக்க

Punjab Kings vs Kolkata Knight Riders | கொல்கத்தா அணி சார்பில் திம் சவுதி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

  • Last Updated :
  • Punjab, India

மொகாலியில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு 192 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது பஞ்சாப் அணி.

16-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் 2-வது நாளான இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. முதல் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்சும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்சும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.

அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணி பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தனர். தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் 23 ரன்களும் கேப்டன் ஷிகர் தவான் 40 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். 3வது வீரராக களமிறங்கிய பனுக்கா ராஜபக்சா அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். 32 பந்துகளில் 50 ரன்கள் எடுத்திருந்த அவர் ஆட்டமிழந்தார். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை எடுத்திருந்தனர்.

கொல்கத்தா அணி சார்பில் திம் சவுதி 2 விக்கெட்டும் உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி, சுனில் நரேன் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி கொல்கத்தா அணி விளையாடி வருகிறது.

First published:

Tags: IPL 2023, KKR, Punjab Kings