முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்த ஜானி பேர்ஸ்டோ… பஞ்சாப் அணிக்கு பின்னடைவு

IPL 2023 : ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்த ஜானி பேர்ஸ்டோ… பஞ்சாப் அணிக்கு பின்னடைவு

ஜானி பேர்ஸ்டோ

ஜானி பேர்ஸ்டோ

முக்கியமான ஆட்டக்காரர் தொடரில் இருந்து வெளியேறி இருப்பதால் பஞ்சாப் அணியின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணி வீரர் ஜானி பேர்ஸ்டோ பங்கேற்க மாட்டார்என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் பஞ்சாப் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம் வெள்ளியன்று தொடங்க உள்ளது. இந்த தொடரில் கோப்பையை வெல்ல 10 அணிகள் போராட உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், இங்கிலாந்தை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.

இவர் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார். 33 வயதாகும் ஜானி பேர்ஸ்டோவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது அவர் காயத்திலிருந்து குணமடைந்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு என்.ஒ.சி சான்றிதழ் அளிப்பதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து ஜானி பேர்ஸ்டோ ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.11.50 கோடிக்கு ஜானி பேர்ஸ்டோவை ஐபிஎல் ஏலத்தில் எடுத்தது.இதேபோன்று மற்றொரு கிரிக்கெட் லியாம் லிவிங்ஸ்டனுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கி உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் சாம் கரணை பஞ்சாப் கிங்ஸ அணி ரூ. 18.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. அவர் இந்த தொடரில் விளையாடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கியமான ஆட்டக்காரர் தொடரில் இருந்து வெளியேறி இருப்பதால் பஞ்சாப் அணியின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

First published:

Tags: IPL, IPL 2023