ஐபிஎல் தொடரில் அதிக கேப்டன்களை மாற்றிய அணியாக பஞ்சாப் புதுவிதமான சாதனை ஒன்றை படைத்துள்ளது. இதுவரை நடந்த 15 சீசனில் 14 கேப்டன்கள் அந்த அணிக்கு தலைமை தாங்கியுள்ளனர். ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லாத அணிகளுள் பஞ்சாப் கிங்ஸ் அணியும் ஒன்று. இந்தாண்டு கேப்டனாக ஷிகர் தவான் தலைமையில் பஞ்சாப் களம் காண உள்ளது.
கடந்த ஆண்டு கேப்டனாக இருந்த மயங்க் அகர்வால் விடுவிக்கப்பட்டதால் ஷிகர் தவான் கேப்டனாக செயல்பட உள்ளார். மேலும் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக இருந்த டிரேவர் பெய்லிஸை புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது பஞ்சாப் அணிக்கு கூடுதல் பலத்தை பெற்று தந்துள்ளது.
அதிரடி வீரர் ஜானி பேர்ஸ்டோ காலில் ஏற்பட்ட காயம் பஞ்சாப்புக்கு ஒரு அடி தான். இந்தாண்டு நடைபெற்ற மினி ஏலத்தில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரனை ரூ.18.50 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளதால் அவரது ஆட்டம் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், ஷாருக்கான். லிவிங்ஸ்டன், சிகந்தர் ராசா, ரபடா, பானுகா ராஜபக்சே, மேத்யூ ஷார்ட் அந்த அணியில் முக்கியமான வீரர்களாக உள்ளனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணி விவரம்:
ஷிகர் தவான் (கேப்டன்), ஷாருக் கான், மேத்யூ ஷார்ட், பிரப் சிம்ரன் சிங், பானுகா ராஜபக்சே, ஜிதேஷ் சர்மா, ராஜ் பாவா, ரிஷி தவான், லியாம் லிவிங்ஸ்டன், அதர்வா டைடே, அர்ஷ்தீப் சிங், பால்தேஜ் சிங், நாதன் எல்லிஸ், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், ஹர்பிரீத் பிரார் , சாம் குர்ரன், சிக்கந்தர் ராசா, ஹர்ப்ரீத் பாட்டியா, வித்வத் கவேரப்பா, மோஹித் ரதீ, சிவம் சிங்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IPL 2023, Punjab Kings