அகமதாபாத்தில் நேற்று அதிகாலை நிறைவடைந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி, 5வது முறையாக சிஎஸ்கே அணி வாகை சூடியது. இந்நிலையில் நேற்று சென்னை திரும்பிய சிஎஸ்கே அணி நிர்வாகிகள் மற்றும் தலைமை பயிற்சியாளர் பிளம்பிங் ஆகியோருக்கு விமான நிலையத்தில் குழுமியிருந்த ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிஇஓ காசி விஸ்வநாதன், ரசிகர்களின் ஆதரவால்தான் வெற்றி சாத்தியமானதாகவும், அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். இதனிடையே, அகமதாபாத்தில் இருந்து பெட்டியில் எடுத்துவரப்பட்ட ஐபிஎல் கோப்பை, காரில் கொண்டு செல்லப்பட்டது
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்பதற்காக ரஹானே, ஜடேஜா ஆகியோர் லண்டன் சென்றுள்ள நிலையில், மற்ற வீரர்கள் அனைவருமே சென்னை வரவுள்ளனர். அவர்களுக்கு விரைவில் பாராட்டு விழா நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க... சென்னை சூப்பர் கிங்ஸ்-க்கு வாழ்த்து சொன்ன சுந்தர் பிச்சை!
சென்னை தியாகராயர் நகரில் உள்ள பெருமாள் கோயிலில், ஐபிஎல் கோப்பையை வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. சென்னை கொண்டு வரப்பட்ட ஐபிஎல் கோப்பையை, இந்தியா சிமெண்ட்ஸ் தலைவர் ஸ்ரீனிவாசன், சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் ஆகியோர் பெருமாள் கோயிலுக்கு கொண்டு சென்றனர்.
சுமார் 30 நிமிடங்கள் சுவாமி சன்னிதானத்தில் கோப்பையை வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது கோயிலில் கூடியிருந்த ரசிகர்கள் சி.எஸ்.கே.... சி.எஸ்.கே... என முழக்கமிட்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, CSK, IPL 2023, Tirupati temple