முகப்பு /செய்தி /விளையாட்டு / ஐசிசியின் ஏப்ரல் மாத சிறந்த வீரராக பாகிஸ்தானின் பகர் ஜமான் தேர்வு…

ஐசிசியின் ஏப்ரல் மாத சிறந்த வீரராக பாகிஸ்தானின் பகர் ஜமான் தேர்வு…

பகர் ஜமான்

பகர் ஜமான்

ஒவ்வொரு மாதமும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் சர்வதேச கிரிக்கெட் வீரர்களை ஐசிசி கவுரவித்து வருகிறது

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஏப்ரல் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரராக பாகிஸ்தான் அணியின் பகர் ஜமான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிராக அவர் சிறப்பாக ஆடியதை தொடர்ந்து இந்த விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரருக்கான போட்டியில் பகர் ஜமான், பிரபாத் ஜெயசூரியா மற்றும் மார்க் சாப்மேன் ஆகியோர் போட்டியில் இருந்தனர். இவர்களை பின்னுக்கு தள்ளி அதிக வாக்கெடுப்புகளை பெற்று பகர் ஜமான சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ராவல் பிண்டியில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பகர் ஜமான் 180 ரன்களை குவித்தார். இந்த போட்டியில் 337 ரன்களை சேஸிங் செய்து பாகிஸ்தான் வெற்றி பெற்றது. அந்த அணி சேஸிங் செய்துள்ள 2 ஆவது மிகப்பெரிய ஸ்கோராக இது அமைந்தது. இந்த போட்டியில் 17 பவுண்டரி மற்றும 6 சிக்சர்களுடன் 180 ரன்களை பகர் ஜமான் குவித்தார். 10 பந்துகள் மீதம் உள்ள நிலையில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. முன்னதாக நடந்த முதல் ஒருநாள் போட்டியில் பகர் ஜமான் 114 பந்துகளில் 117 ரன்கள் எடுத்தார்.

top videos

    இதேபோன்று டி20 போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒவ்வொரு மாதமும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் சர்வதேச கிரிக்கெட் வீரர்களை ஐசிசி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் ஏப்ரல் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை பகர் ஜமான் பெற்றிருக்கிறார். இதற்கிடையே நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியது. இந்த 2 தொடர்களையும் நியூசிலாந்து அணி இழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: IPL, IPL 2023