முகப்பு /செய்தி /விளையாட்டு / இன்ஸ்டாகிராமில் விராட் கோலியை சீண்டும் ஆப்கன் வீரர் நவீன் உல் ஹக்… ரசிகர்கள் கடும் விமர்சனம்

இன்ஸ்டாகிராமில் விராட் கோலியை சீண்டும் ஆப்கன் வீரர் நவீன் உல் ஹக்… ரசிகர்கள் கடும் விமர்சனம்

விராட் கோலியுடன் களத்தில் மோதிய நவீன் உல் ஹக்

விராட் கோலியுடன் களத்தில் மோதிய நவீன் உல் ஹக்

கோலிக்கும் நவீனுக்கும் களத்திற்குள் மோதல் நடந்த நிலையில், தற்போது சமூக வலை தளங்களில் இருவரும் மோதத் தொடங்கியுள்ளனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பெங்களூரு அணியின் விராட் கோலியை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் விளையாடும் ஆப்கன் வீரர் நவீன் உல் ஹக் இன்ஸ்டாகிராமில் சீண்டியுள்ளார். இந்த சம்பவம் விராட் கோலி ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1 ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் மோதின. இந்த போட்டியின்போது கோலிக்கும், நவீனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

போட்டி முடிந்த பின்னரும் இருவரும் மோதிக் கொண்டனர். இதையடுத்து விராம் கோலிக்கும் லக்னோ அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்குவதற்காக நெருங்கி வந்தவர்களை சக வீரர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த பிரச்னை காரணமாக விராட் கோலி மற்றும் கவுதம் காம்பீருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 100 சதவீதமும், நவீன் உல் ஹக்கிற்கு 50 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று மும்பை அணிக்கு எதிரான போட்டியின்போது பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 199 ரன்கள் எடுத்தது. இதில் விராட் கோலி ஒரேயொரு ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதுகுறித்து மும்பை அணியின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்த நவீன் உல் ஹக், ருசியான மாம்பழங்கள் என்று கேப்ஷன் கொடுத்தருந்தார். பெங்களூரு அணியை மும்பை வென்ற பின்னர் இன்னொரு புகைப்படத்தை பதிவிட்ட நவீன், அதற்கு 2 ஆவது ரவுண்ட் சாப்பிடுகிறேன். நான் சாப்பிட்டதில் சிறந்த மாம்பழங்களில் ஒன்றாக இவை உள்ளன. என்று கூறியிருந்தார்.

top videos

    அவர் விராட் கோலியையும், பெங்களூரு அணியையும் குறிப்பிட்டு கூறுவதாக விராட் கோலியின் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கோலிக்கும் நவீனுக்கும் களத்திற்குள் மோதல் நடந்த நிலையில், தற்போது சமூக வலை தளங்களில் இருவரும் மோதத் தொடங்கியுள்ளனர்.

    First published:

    Tags: IPL, IPL 2023