முகப்பு /செய்தி /விளையாட்டு / விராட் கோலியை ஸ்டேட்டஸ் போட்டு சீண்டிய நவீன் உல் ஹக்.. கொதிப்பில் ரசிகர்கள்

விராட் கோலியை ஸ்டேட்டஸ் போட்டு சீண்டிய நவீன் உல் ஹக்.. கொதிப்பில் ரசிகர்கள்

விராட் கோலியை சீண்டிய நவீன் உல் ஹக்

விராட் கோலியை சீண்டிய நவீன் உல் ஹக்

ஐபிஎல் தொடரில் இருந்து ஆர்சிபி வெளியேறிய நிலையில், விராட் கோலியை சீண்டும் விதமாக நவீன் உல் ஹக் ஸ்டேடஸ் வைத்துள்ளார்.

  • Last Updated :
  • Karnataka, India

2023 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்காக விளையாடி வரும் வீரர் நவீன் உல் ஹக். வேகப்பந்து வீச்சாளரான இவர் இந்த தொடரில் விராட் கோலியுடன் ஏற்பட்ட மோதலின் காரணமாக தனி கவனம் பெற்றுள்ளார். கடந்த மே 1ஆம் தேதி லக்னோ அணி பெங்களூரு அணியுடன் மோதிய நிலையில், இந்த போட்டியில் நவீன் உல் ஹக் மற்றும் கோலி இடையே மோதல் மற்றும் வாக்குவாதம் நடைபெற்றது.

இந்த மோதல் கம்பீர் மற்றும் கோலி ஆகியோருக்கு இடையே பரவி பேசுபொருளாக மாறியது. அதைத் தொடர்ந்து நவீன் உல் ஹக் விராட் கோலியை இணையத்தில் தனது ஸ்டேடஸ்கள் மூலம் தொடர்ந்து சீண்டி வருகிறார். ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில், குஜராத் அணி ஆர்சிபி அணியை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றால் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. போட்டியில் ஆர்சிபி வீரர் விராட் கோலியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அபார சதமடித்தார்.

இருப்பினும் குஜாரத் அணி இலக்கை சேஸ் செய்து வெற்றி பெற்றதால், தொடரில் இருந்து ஆர்சிபி வெளியேறியது. இதன் மூலம் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆர்சிபி மற்றும் விராட் கோலியின் கனவானது இம்முறையும் தகர்ந்தது.

இதையும் படிங்க: ‘கிங்’ கோலி சதங்களில் சாதனை.. ஐபிஎல் கிரிக்கெட்டில் கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த விராட்!

தோல்வின் விரக்தியில் இருந்த விராட் கோலியை சீண்டும் விதமாக லக்னோ அணியின் வீரர் நவீன் உல் ஹக் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டேடஸ் ஒன்றை வைத்துள்ளார். அந்த ஸ்டேடஸ் இல் ஒரு டிவி தொகுப்பாளர் அதீத சந்தோஷத்தில் ஜாலியாக சிரிக்கும் புகைப்படம் உள்ளது.

ஆர்சிபி அணி தோற்றவுடன் நவீன் இத்தகைய ஸ்டேடஸ் வைத்தது வேண்டுமென்றே கோலியை சீண்டத்தான் என ரசிகர்கள் அனைவருக்கும் புரிந்தது. இது விராட் கோலி ரசிர்கள் மத்தியில் ஆவேசத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் கமெண்டுகள் மூலம் நவீன் உல் ஹக்கை வறுத்தெடுத்து வருகின்றனர்.

First published:

Tags: IPL 2023, Virat Kohli