முகப்பு /செய்தி /விளையாட்டு / எங்கள் தோல்விக்கு இவர்தான் காரணம்... வெளிப்படையாக பேசிய ரோகித் சர்மா..!

எங்கள் தோல்விக்கு இவர்தான் காரணம்... வெளிப்படையாக பேசிய ரோகித் சர்மா..!

ரோகித் சர்மா

ரோகித் சர்மா

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதிய நேற்றைய போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக தீபக் ஹூடா மற்றும் குவின்டன் டி காக் களத்தில் இறங்கினர்.

தீபக் ஹூடா 5 ரன்கள் எடுத்திருந்தபோது பெரன்டாஃப் பந்துவீச்சில் டிம் டேவிட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய பிரிரக் மன்காட் பெரன்டாஃப் வீசிய முதல் பந்திலேயே இஷான் கிஷனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சிறிது நேரம் தாக்குப் பிடித்த குவின்டன் டி காக் 16 ரன்கள் எடுத்திருந்தபோது, பியூஷ் சாவ்லாவின் சுழலில் விக்கெட்டை பறி கொடுத்தார்.

42 பந்துகளில் 49 ரன்கள் எடுத்திருந்தபோது க்ருணல் பாண்ட்யா ரிட்டையர்ட் ஹர்ட் என்ற முறையில் வெளியேறினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஸ்டாய்னிஸ் 47 பந்துகளில் 8 சிக்சர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி 177 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர்.

முதல் விக்கெட்டிற்கு கேப்டன் ரோஹித் சர்மாவும் இஷான் கிஷனும் 90 ரன்கள் சேர்த்து அற்புதமான தொடக்கத்தை கொடுத்தனர். ரோஹித் 37 ரன்னில் ஆட்டமிழக்க, இஷான் கிஷன் 59 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 7 ரன்னில் வெளியேற நெஹல் வதேரா 16 ரன்கள் எடுத்தார். டிம் டேவிட் 3 சிக்சர்கள் அடித்து அணிக்கு நம்பிக்கை ஏற்படுத்தினார்.

கடைசி 2 ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டபோது ஒரு நோ பால் மற்றும் ஒரு பவுண்டரி மூலம் மும்பை அணி 19 ரன்களை எடுத்தது. ஆனால் கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டபோது சிறப்பாக பந்துவீசிய மொஹ்சின் கான் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதன் மூலம் லக்னோவிடம் மும்பை அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

இதையும் படிக்க : லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி…

இந்த போட்டிக்கு பிறகு பேசிய ரோகித் சர்மா, நாங்கள் வெற்றி பெறுவதற்காக இருந்த சிறிய முயற்சிகளையும் விட்டுவிட்டோம். இந்த பிட்சில் 178 என்ற ரன்களை நிச்சயம் சேஸ் செய்திருக்க வேண்டும். ஆனால் நாங்கள் ஆட்டத்தின் இறுதியில் அதிக ரன்களை கொடுத்து விட்டோம்.

மேலும் எங்களின் துவக்கம் சிறப்பாக அமைந்தது. ஆனால் எங்களின் முடிவு சரியாக அமையவில்லை. லக்னோ வீரர்  ஸ்டோய்னிஸ் பேட்டிங்கில் மிக சிறப்பாக செயல்பட்டார். ஆடுகளத்திற்கு ஏற்றவாறு ஸ்டோய்னிஸ் தனது பேட்டிங் ஸ்டைலையும் மாற்றி கொண்டு விளையாடினார். அதுவே எங்களின் பின்னடைவுக்கு காரணம்.  நிச்சயம் அவரின் ஆட்டம் பாராட்டுக்குறியது. இறுதி போட்டியான ஹைதராபாத் அணிக்கு எதிராக நிச்சயம் நாங்கள் வெல்ல வேண்டும் என தெரிவித்தார்.

First published:

Tags: IPL 2023, LSG, Mumbai Indians