சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான களப் பணியாளர்களுடன் கலந்துரையாடிய சிஎஸ்கே அணி கேப்டன் தோனி, அவர்களுக்கு ஆட்டோகிராப் மற்றும் பரிசுகள் அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் உள்ள கிரிக்கெட் மைதானப் பணியாளர்களுடன் கலந்துரையாடுவதை மகேந்திர சிங் தோனி வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு சென்ற மகேந்திர சிங் தோனி, அங்கு பிட்ச் சீரமைக்கும் பணியாளர்களை சந்தித்து, அவர்களுடன் பேசினார். பின்னர் சிஎஸ்கே அணி நிர்வாகம் சார்பில் களப்பணியாளர்கள் 20 பேருக்கு பரிசுகளை வழங்கிய தோனி அவர்களை தனித்தனியாக அழைத்துப் பேசியதுடன் ஆட்டோகிராப் அளித்தார்.
Anbuden Thala - A mark of respect for the markers and the ground staff who toil hard to make us game ready! 💛📹#WhistlePodu #Yellove 🦁💛 @msdhoni pic.twitter.com/MTyFpvEWud
— Chennai Super Kings (@ChennaiIPL) May 25, 2023
பின்னர் களப்பணியாளர்களுடன் மகேந்திர சிங் தோனி குழு படமும் எடுத்துக்கொண்டார். தல தோனியை அருகில் சந்தித்து, அவருடன் கலந்துரையாடிய பணியாளர்கள், தோனி கையில் பரிசுகளை பெற்றதால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போயினர்.
பிளே ஆப் சுற்றில், குஜராத் அணிக்கு எதிரான முதல் தகுதிச்சுற்றுப்போட்டியில் சென்னை வீரர்கள் வெற்றிக்கு மைதானத்தின் தன்மையும் ஒரு முக்கிய பங்கு வகித்திருந்தது. இந்த நிலையில் மைதானத்தை தயார் செய்வதில் முனைப்பு காட்டிய பணியாளர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் கௌரவித்ததை அந்த அணி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.