முகப்பு /செய்தி /விளையாட்டு / “தோனி கண்ணீர் விட்டு அழுத அந்த இரவு...” - நெகிழ்ச்சி சம்பவத்தை பகிர்ந்த ஹர்பஜன் சிங்

“தோனி கண்ணீர் விட்டு அழுத அந்த இரவு...” - நெகிழ்ச்சி சம்பவத்தை பகிர்ந்த ஹர்பஜன் சிங்

தோனி

தோனி

தோனியை பற்றி சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வை பதிவு செய்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து இப்போது வரை ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ள அணி என்று சொன்னால் அது சிஎஸ்கே தான். அதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆரம்பித்ததில் இருந்தே தல தோனி தான் கேப்டன். அந்த அளவு வெற்றிகரமாக அணியை வழி நடத்தி செல்கிறார் தோனி.

இதுவரை 14 ஐபிஎல் தொடர்களில் விளையாடி உள்ளது சென்னை அணி. அதில் 10 இறுதிபோட்டிகளில் ஆடி உள்ளது. அதில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஆனால் ஒரு சில காரணங்களால் சிஎஸ்கே அணிக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்தது. தடை நீங்கி மீண்டும் 2018 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறது சிஎஸ்கே அணி. நடப்பு தொடரிலும் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி வெற்றிகரமாக விளையாடி வருகிறது.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற வாழ்வா சாவா என்ற போட்டியில் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழத்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்நிலையில் தல தோனியை பற்றி அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வை பதிவு செய்துள்ளார்.

தோனி அவர் மைதானத்திற்குள் இறங்கினாலே ரசிகர் கூட்டம் கொண்டாடி மகிழ்கிறது. இதற்கு காரணம் அவர் கூலாக இருப்பது தான். என்ன நடந்தாலும் மிக கூலாக அந்த சூழலை தோனி கையாள்வார் என்கிறார்கள். ஆனால் அவரே உணர்ச்சி வசப்பட்டு அழுதார் என்ற தகவலை வெளிப்படுத்தியுள்ளார் ஹர்பஜன். ஆம் இது நடந்தது கடந்த 2018 ஆம் ஆண்டு.
 
View this post on Instagram

 

A post shared by Star Sports India (@starsportsindia)இரண்டாண்டுகள் தடைக்குப் பிறகு மீண்டும் தொடருக்குள் வந்த போது, 2018 ஆம் ஆண்டு அணியின் வீரர்களுக்கு ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியின் போது தோனி உணர்ச்சி வசப்பட்டு அழுததாக குறிப்பிட்டுள்ளார் ஹர்பஜன்.

“ஆண்கள் அழுவதில்லை என்ற பழமொழியை நான் கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் அன்று இரவு தோனி அழுதார். அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். இதைப் பற்றி யாருக்கும் தெரியாது என நினைக்கிறேன். சரியா, இம்ரான் தாஹிர்?” எனக் கேட்டுள்ளார் ஹர்பஜன்.

அதற்கு இம்ரானும் “ஆம், நிச்சயமாக. அப்பொழுது நானும் அங்கு இருந்தேன். தோனிக்கு அது ஒரு உணர்ச்சிகரமான தருணம். அவரை அப்படி பார்க்கும் பொழுது இந்த அணி அவருக்கு எவ்வளவு நெருக்கமானது என்பதை நான் அறிந்தேன். அவர் அணியை தன் குடும்பமாக கருதுகிறார்” என பதிவிட்டிருக்கிறார் இம்ரான்.

top videos

    இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை பகிர்ந்துள்ள ஹர்பஜன் மற்றும் இம்ரான் இருவருமே இப்போது சிஎஸ்கே அணியில் இல்லை. ஆனாலும் தோனியை கொண்டாடுகிறார்கள்.

    First published:

    Tags: CSK, Harbhajan Singh, MS Dhoni