முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘தோனியால் இன்னும் 4 ஆண்டுகளுக்கு விளையாட முடியும்’ – ஆஸி. முன்னாள் வீரர் புகழாரம்

‘தோனியால் இன்னும் 4 ஆண்டுகளுக்கு விளையாட முடியும்’ – ஆஸி. முன்னாள் வீரர் புகழாரம்

எம்.எஸ். தோனி

எம்.எஸ். தோனி

தோனியின் ஃபிட்னெஸ் மற்றும் ஆட்டங்கள் குறித்த அவருடைய நுட்பமான புரிதல் அவரை சிறந்த கேப்டனாக நீடிக்க செய்கின்றன.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியால் இன்னும் 4 ஆண்டுகளுக்கு கிரிக்கெட் விளையாட முடியும் என்றும் அவர் மிகவும் ஃபிட்டாக இருப்பதாகவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் ஷேன் வாட்சன் புகழாரம் சூட்டியுள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 31 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் தோனி தலைமையிலான சென்னை அணி கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பில் சி.எஸ்.கே. ரசிகர்கள் உள்ளனர். முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை எதிர்கொள்கிறது.

தோனி தலைமையிலான சென்னை அணி 2010, 2011, 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்நிலையில் தோனி குறித்து ஆஸ்திரேலியா மற்றும் சிஎஸ்கே அணிகளின் முன்னாள் ஆல் ரவுண்டர் ஷேன் வாட்சன் கூறியதாவது- இந்த ஐபிஎல் தோனியின் கடைசி ஐபிஎல்லாக இருக்கும் என்று சொல்கிறார்கள். ஆனால் நான் அப்படி எதுவும் நினைக்கவில்லை. தோனி மிகவும் ஃபிட்டாக இருக்கிறார். அவரால் அடுத்த 4 ஆண்டுகளுக்கு கூட கிரிக்கெட் விளையாட முடியும்.

top videos

    அவரது தலைமையில் சென்னை அணி விளையாடுவது அணிக்கு கூடுதல் பலம். தோனியின் ஃபிட்னெஸ் மற்றும் ஆட்டங்கள் குறித்த அவருடைய நுட்பமான புரிதல் அவரை சிறந்த கேப்டனாக நீடிக்க செய்கின்றன. அத்துடன் மைதானத்தில் தோனி வெளிப்படுத்தும் திறமையை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். சென்னை அணி தொடர் வெற்றிகளை குவித்ததற்கான காரணங்களில் தோனி முக்கிய இடத்தில் இருப்பார். இவ்வாறு அவர் கூறினார். வாட்சன் தற்போது கத்தாரின் தோஹா நகரில் நடைபெற்று வரும் லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார்.

    First published:

    Tags: Cricket, IPL, IPL 2023