தோனி கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டியும் இந்த ஐபிஎல் இறுதி போட்டிக்கும் ஒற்றுமை குறித்து தற்போது சமூக வலைதளங்களில் விவாத பொருளாகியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி, குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால், மாலை முதலே மழை பெய்து வந்ததால் போட்டி இன்று ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் தோனி ரசிகர்கள் ஐபிஎல் இறுதிப் போட்டி மாற்றி வைக்கப்பட்டது குறித்து 4 ஆண்டுகளுக்கு முந்தைய தோனியின் அதிர்ச்சி சம்பவத்தைப் பற்றி பகிர்ந்து சோகத்துடன் பதிவுகளை செய்து வருகின்றனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தோனி கடைசியாக விளையாடிய சர்வதேச போட்டிக்கும் உள்ள சுவாரஸ்யத்தை தொடர்புபடுத்தி பேசி வருகின்றனர்.
2019ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டமும் இதேபோல் மழை காரணமாக இரு நாட்களாக நடைபெற்றது. அந்தப் போட்டியில் தோனி கடைசி வரை போராடி குப்தில் கையில் ரன் அவுட்டானதால், இந்திய அணி தோல்வியடைந்தது. அதன் பிறகு இந்திய அணியில் விளையாடாமல் இருந்த தோனி திடீரென 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 தினம் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக வீடியோ ஒன்றை பதிவு செய்து ஓய்வு பெற்றுவிட்டார். இருப்பினும் ஐபிஎல் தொடர்களில் விளையாடி வந்தார்.
இதையும் படிங்க: இன்றும் மழை பெய்தால் என்ன நடைமுறை? சென்னை அணிக்கு பின்னடைவாக இருக்கும் விதிமுறை...
தோனி 2019 ஆம் ஆண்டோடு சர்வதே போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் கடைசியாக விளையாடிய சர்வதேச போட்டி 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில்தான். அந்த போட்டி மழை காரணமாக முதல் நாள் முழுவதும் நடக்காமல் ரிஸர்வ் நாளுக்கு மாற்றி வைக்கப்பட்டது. அதேபோல் இந்த ஐபிஎல் தொடர் இறுதிப்போட்டி ரிசர்வ் நாளிற்கு மாற்றப்பட்டுள்ளதால் தோனி என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பது குறித்து ரசிகர்கள் சோகத்துடன் காத்திருக்கின்றனர். இரு போட்டிகளையும் ஒப்பிட்டு ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை சமூக வலைதளங்கள் மூலம் பதிவிட்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CSK, Gujarat Titans, IPL 2023, MS Dhoni