முகப்பு /செய்தி /விளையாட்டு / ஐசியுவில் தந்தை... அபாரமாக பந்துவீசிய மோசின் கான்... ஐபிஎல் நெகிழ்ச்சி..!

ஐசியுவில் தந்தை... அபாரமாக பந்துவீசிய மோசின் கான்... ஐபிஎல் நெகிழ்ச்சி..!

மோசின் கான்

மோசின் கான்

நேற்றைய போட்டியில் இறுதி ஓவரில் 5 ரன்களை மட்டுமே கொடுத்த மோசின் கான், ஆட்டம் முடிந்த பிறகு தனது தந்தைக்கு வீடியோ கால் மூலம் பேசிய படம் வேகமாக பரவி வருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் 16ஆவது சீசனின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களை எடுத்தது.

இதையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. ஆனால் விக்கெட்டுகள் சரிய, இறுதி ஓவரில் வெற்றி பெற 11 ரன்கள் தேவைப்பட்டது.

லக்னோ அணியில், இறுதி ஓவரை வீசிய மோசின் கான், வெறும் 5 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து, லக்னோ அணியை வெற்றி பெற செய்தார். இவரின் இந்த ஓவர், நேற்று கிரிக்கெட் உலகில் பேசுபொருளானது.

போட்டிக்கு பிறகு பேசிய மோசின் கான், தனது தந்தை உடல்நலம் சரியில்லாமல் கடந்த 10 நாட்களாக ஐசியுவில் இருந்ததாகவும், அவருக்காக தான் விளையாடியதாகவும் தெரிவித்தார். மேலும் கடந்த 10 மாதங்களாக கிரிக்கெட் விளையாடாமல், நேரடியாக வந்து ஐபிஎல் போட்டியில் விளையாடி வெற்றி பெற்று தந்தது வியப்பளிப்பதாக லக்னோ கேப்டன் க்ருணல் பாண்டியா தெரிவித்தார்.

இதையும் படிக்க : எங்கள் தோல்விக்கு இவர்தான் காரணம்... வெளிப்படையாக பேசிய ரோகித் சர்மா..!

top videos

    இதையடுத்து, அந்த வெற்றிக்கு பிறகு, தனது தந்தைக்கு வீடியோ கால் மூலம் பேசி தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார் மோசின் கான். அவர் பேசியதை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்து, தனது தந்தை விரைவில் நலமடைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இந்த படம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    First published:

    Tags: IPL 2023, LSG, MI, Mumbai Indians