முகப்பு /செய்தி /விளையாட்டு / ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழையுமா லக்னோ அணி? முக்கியமான ஆட்டத்தில் கைகொடுத்த வீரர்கள்

ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழையுமா லக்னோ அணி? முக்கியமான ஆட்டத்தில் கைகொடுத்த வீரர்கள்

ப்ரேரக் மன்கட் - நிகோலஸ் பூரன்

ப்ரேரக் மன்கட் - நிகோலஸ் பூரன்

லக்னோ அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த நிகோலஸ் பூரன் ரூ. 16 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைவதற்கான வாய்ப்பை லக்னோ அணி தக்க வைத்துக் கொண்டுள்ளது. நேற்று நடந்த மிக முக்கியமான ஆட்டத்தில் திறமையாக செயல்பட்ட நிகோலஸ் பூரன் உள்ளிட்ட வீரர்கள் அணியை வெற்றி பெற வைத்தனர். சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய வெற்றியின் மூலம் லக்னோ அணி 2 புள்ளிகள் கூடுதலாக பெற்று பாயின்ட்ஸ் டேபிளில் தற்போது 4 ஆவது இடத்தில் உள்ளது. இன்னும் ராஜஸ்தான், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் தலா 2 போட்டிகளிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இன்னும் 3 போட்டியிலும் விளையாடவுள்ளன.

இதன் அடிப்படையில் பாயின்ட்ஸ் டேபிளில் 4 ஆவது இடத்திற்கான போட்டி லக்னோ, ராஜஸ்தான், பஞ்சாப் கிங்ஸ், பெங்களூரு அணிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால் பரபரப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில் நேற்று நடந்த முக்கியமான ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் தங்களது ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தக்க வைத்துள்ளது. ஐதராபாத்தில் நேற்று நடந்த சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி 182 ரன்களை சேஸிங் செய்தது.

அதிரடி வீரர் கைல் மேயர்ஸ் 14 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து நடையைக் கட்டினார். குவின்டன் டி காக் 19 பந்துகளில் 29 ரன்கள் எடுக்க லக்னோ அணி 8.2 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து இணைந்த பிரேரக் மன்கட் மற்றும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் இணை பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தது. 25 பந்துகளில் ஸ்டாய்னிஸ் 40 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த நிகோலஸ் பூரன் 13 பந்துகளில் 4 சிக்சர் 3 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் குவிக்க, மன்கட் 45 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். 19.2 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழநத லக்னோ அணி வெற்றி இலக்கை அடைந்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வென்றது. லக்னோ அணியின் இந்த அதிரடி வெற்றியால் ஐபிஎல் தொடரின் விறுவிறுப்பு அதிகரித்துள்ளது. லக்னோ அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த நிகோலஸ் பூரன் ரூ. 16 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: IPL, IPL 2023