முகப்பு /செய்தி /விளையாட்டு / கிங் சுப்மன் கில்.... கோலியை சீண்டும் லக்னோ அணியின் ட்விட்டர் பதிவு- நெட்டிசன்கள் கோபம்

கிங் சுப்மன் கில்.... கோலியை சீண்டும் லக்னோ அணியின் ட்விட்டர் பதிவு- நெட்டிசன்கள் கோபம்

விராட் கோலி - கவுதம் காம்பிர்

விராட் கோலி - கவுதம் காம்பிர்

குஜராத் அணிக்கு எதிரானப் போட்டியில் பெங்களூரு அணி தோல்வியடைந்த நிலையில் கோலியை சீண்டும் வகையில் லக்னோ அணியின் ட்வீட் செய்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஏப்ரல் 10-ம் தேதி சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆர்.சி.பி - லக்னோ அணிகள் மோதியது. சின்னசாமி ஸ்டேடியம் ஆர்.சி.பியின் ஹோம் க்ரவுண்ட். கேஜிஎஃப் வீரர்களான கோலி, மேக்ஸ்வெல், டுபிளசிஸ் பேட்டிங்கில் மிரட்ட 212 ரன் எடுத்து மிரட்டியது ஆர்சிபி.

லக்னோவுக்கு ஆரம்பத்தில் அடி விழுந்தாலும் நிக்கோலஸ் பூரன் - ஸ்டோனிஸ் மிரட்ட மேட்ச் லக்னோ பக்கம் திரும்பியது. கடைசி பந்தில் நம்ம டிகே ரன் அவுட் மிஸ் செய்ய த்ரில் வெற்றி பெற்றது லக்னோ. மேட்ச்சில் லக்னோ ஜெயிச்சாலும் ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்கள் ஆர்சிபி.. ஆர்சிபி என கத்த கடுப்பானார் லக்னோ மெண்டார் கவுதம் கம்பீர். சின்னசாமி க்ரவுண்டுக்குள் வந்த கம்பீர் கேலரியில் இருந்த ரசிகர்களை நோக்கி சைலென்ஸ் என விரலை வாயில் வைத்து மிரட்ட காண்டானார்கள் ரசிகர்கள்.

அதனைத் தொடர்ந்து, மே 1-ம் தேதி லக்னோவில் நடைபெற்றப் போட்டியில் லக்னோவும் பெங்களூரு அணியும் மோதின. அதில், பெங்களூரு அணி குறைந்த ரன்களே எடுத்திருந்தாலும், சிறப்பான பந்துவீச்சின் மூலம் போட்டியில் வெற்றி பெற்றது பெங்களூரு அணி. அந்தப் போட்டியின் இடையிடையே காம்பீர் போன்று செய்கை செய்து கோலி, காம்பீரை கடுப்பேற்றிவந்தார். மேட்சின்போதும், அமித் மிஸ்ராவுடன் கோலிக்கு முட்டிக் கொண்டது.

போட்டி முடிந்தவுடன் கோலியும், காம்பீரும் கடுமையாக முட்டிக் கொண்டனர். பலரும் வந்து சமாதானம் செய்யும் அளவுக்கு அந்தப் பிரச்னை சென்றது. இந்தநிலையில், லக்னோ அணி பாயிண்ட் டேபிள் மூன்றாவது இடத்தைப் பிடித்து ப்ளேஆப் சுற்றுக்குள் நுழைந்தது. ஆனால், ஆர்.சி.பி நேற்று வாழ்வா சாவா நிலையில் குஜராத் அணியுடன் மோதியது. அதில், கோலி சிறப்பாக ஆடி 100 ரன்களைக் குவித்தார். பெங்களூரு அணி 197 ரன்கள் குவித்தது. அடுத்ததாக களமிறங்கியது குஜராத் அணி.

தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷப்மன் கில், கடைசி வரையில் ஆட்டமிழக்கமால் 8 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். பெங்களூரு வீரர்கள் எவ்ளோ முயன்றும் கில்லை விக்கெட் எடுக்கச் செய்ய முடியவில்லை. குஜராத் அணியுடன் தோல்வியடைந்ததால் ப்ளேஆப் வாய்ப்பை பெங்களூரு அணி இழந்தது.

குஜராத்திடம் பெங்களூரு அணி தோல்வி… ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது மும்பை இந்தியன்ஸ்

top videos

    இந்தநிலையில், கோலியை சீண்டும் வகையில் லக்னோ அணியின் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்யப்பட்டிருந்தது. ஷப்மன் கில்லைப் பாராட்டும் வகையில் போடப்பட்ட ட்வீட்டில், ‘ப்ரின்சா? அவர் ஏற்கெனவே கிங்தான்’ என்று பொருள்படும் வகையில் பதிவிட்டிருந்தனர். கோலியை அனைவரும் கிங் கோலி என்று அழைக்கும் சூழலில் ஷப்மன் கில்லுக்கு கிங் என்று அடைமொழி கொடுத்து கோலி சீண்டியுள்ளனர். லக்னோவின் ட்விட்டர் பதிவில் நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

    First published:

    Tags: RCB, Virat Kohli