கடந்த ஆண்டு பிளே ஆப் சுற்று வரை சென்று தவறவிட்ட சாம்பியன் பட்டத்தை இந்த முறை முழுவீச்சில் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் சிறந்த முன்னணி வீரர்கள் அடங்கிய பிளேயிங் லெவன் உடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லக்னோ அணியில் கடந்த ஆண்டு சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் 616 ரன்களை குவித்தார். இந்த முறை கே எல் ராகுல் உடன் தீபக் ஹூடா அல்லது கையில் மேயர்ஸ் களமிறங்க வாய்ப்புள்ளது, அடுத்து அணியின் மிடில் ஆர்டரை வலு சேர்க்கும் வகையில் மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் ஏலத்தில் வாங்கப்பட்ட நிக்கோலஸ் பூரான் இடம்பெற்றுள்ளனர்.
லக்னோ அணியின் பவுலர்கள் பிரிவில் வேகத்தில் மிரட்ட அவேஷ் கான்,மார்க் வூட் மற்றும் ஜெயதேவ் உனட்கட் இடம் பெற்றுள்ளார்கள் ,மேலும் ஸ்பின்னர்கள் பிரிவில் க்ருணால் பாண்டியா மற்றும் ரவி பிஷ்னோய் இடம்பெற்று அசத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விவரம்:
கே.எல். ராகுல் (கேப்டன்), ஆயுஷ் படோனி, கரண் ஷர்மா, மனன் வோஹ்ரா, குயின்டன் டி காக், மார்கஸ் ஸ்டோனிஸ், கிருஷ்ணப்ப கவுதம், தீபக் ஹூடா, கைல் மேயர்ஸ், க்ருனால் பாண்டியா, அவேஷ் கான், மொஹ்சின் கான், மார்க் வூட், மயங்க் யாதவ், ரவி பிஷ்னோய், நிக்கோலஸ் பூரன், ஜெய்தேவ் உனத்கட், யாஷ் தாக்கூர், ரொமாரியோ ஷெப்பர்ட், டேனியல் சாம்ஸ், அமித் மிஸ்ரா, பிரேராக் மன்கட், ஸ்வப்னில் சிங், நவீன் உல் ஹக், யுத்வீர் சரக்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IPL 2023, Lucknow Super Giants