ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ரன் வித்யாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற லக்னோ அணி பிளே ஆப் சுற்றுக்குள் கால் பதித்துள்ளது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது.
முன்வரிசை வீரர்கள் பெரிதாக சோபிக்காத நிலையில் நிக்கோலஸ் பூரன் அரைசதம் விளாசினார். அதிரடியாக விளையாடிய அவர் 30 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் 58 ரன்கள் குவித்தார். பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன.
ஆனால் இறுதி கட்டத்தில் தனி ஆளாக அதிரடியில் ஈடுபட்ட ரிங்கு சிங், லக்னோ அணிக்கு பயம் காட்டினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சிக்ஸர்களும் பவுண்டரியுமாக ரிங்கு சிங் விளாசினார். ஆனாலும் அந்த ஓவரில் 19 ரன்கள் மட்டுமே கிடைத்ததால் ஒரு ரன் வித்யாசத்தில் லக்னோ அணி த்ரில் வெற்றி பெற்றது.
ரிங்கு சிங், 33 பந்துகளில் 4 சிக்ஸர் 6 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் விளாசி அவுட் ஆகாமல் இருந்தார். இந்த வெற்றியின் வாயிலாக லக்னோ 3ஆவது அணியாக பிளே ஆப் சுற்றுக்குள் சென்றது.
முன்னதாக, டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 77 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. தில்லியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது.
இதையும் வாசிக்க: IPL 2023 : டெல்லியை வென்று ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது சி.எஸ்.கே.!!
இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் மூன்று விக்கெட் இழப்புக்கு 223 ரன் எடுத்தது. 224 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பின்னர் ஆடிய தில்லி அணி ஒன்பது விக்கெட் இழப்புக்கு 146 ரன் எடுத்து தோல்வியை தழுவியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IPL 2023