முகப்பு /செய்தி /விளையாட்டு / பந்துவீச்சில் மிரட்டிய மார்க்வுட்... பேட்டிங்கில் தடுமாறிய டெல்லி... 50 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ வெற்றி

பந்துவீச்சில் மிரட்டிய மார்க்வுட்... பேட்டிங்கில் தடுமாறிய டெல்லி... 50 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ வெற்றி

லக்னோ அணி வெற்றி

லக்னோ அணி வெற்றி

LSGvDC | டெல்லி அணிக்கு எதிரானப் போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.

  • Last Updated :
  • Lucknow, India

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 3வது லீக் போட்டியில் லக்னோ மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து, கேப்டன் கே.எல். ராகுல் மற்றும் கைல் மேயர்ஸ் ஆகியோர் லக்னோ அணிக்கான தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். நிதனமாக விளையாடிய ராகுல் 8 ரன்களில் ஆவுட்டானர். லக்னோ அணி பவர்பிளே முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 30 ரன்களை மட்டுமே எடுத்தது.

பவர்பிளே முடிந்த பின்னர் டெல்லி அணி பந்துகளை சிக்சர்களுக்கு பறக்கவிட்டு அதிரடி ஆட்டத்தை மேயர்ஸ் வெளிப்படுத்தினார். 38 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், 7 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகளை அடித்து 73 ரன்கள் எடுத்து அக்சர் பட்டேல் பந்தில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த பூரான் 21 பந்துகளில் 36 ரன்கள் அடிக்க 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 193 ரன்களை எடுத்தது. டெல்லி அணி சார்பில் கலீல் அகமது மற்றும் சகாரியா அதிகபட்சமாக தலா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

அதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி ஆரம்பம் முதலே சற்று தடுமாற்றத்துடனே விளையாடியது. தொடக்க வீரர்களாக பிரித்வி ஷாவும், கேப்டன் வார்னரும் களமிறங்கினர். பிரித்வி ஷா 12 ரன்களில் மார்க்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மிட்செல் மார்ஸ் மார்க்வுட்டின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து, ஷர்பராஸ் கானும் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 7 ஓவரில் 48 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து டெல்லி அணி தடுமாறியது. மறுபுறம், டேவிட் வார்னர் நிதானமாக ஆடினார். அடுத்து களமிறங்கிய ரிலி ரோசாஔ மட்டும் 30 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

மறுபுறம் நிதானமாக ஆடிய வார்னர் 56 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு டெல்லி அணி 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்மூலம் லக்னோ அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

First published:

Tags: IPL 2023, LSG