முகப்பு /செய்தி /விளையாட்டு / ஐபிஎல் தொடரிலிருந்து கே.எல்.ராகுல் விலகல்..? லக்னோ அணியின் அடுத்த கேப்டன் யார்?

ஐபிஎல் தொடரிலிருந்து கே.எல்.ராகுல் விலகல்..? லக்னோ அணியின் அடுத்த கேப்டன் யார்?

கே.எல்.ராகுல்

கே.எல்.ராகுல்

KL Rahul Ruled out ipl 2023 | கே.எல்.ராகுல் இங்கிலாந்தில் நடைபெற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியிலும்  விளையாட வாய்ப்பு இல்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

  • Last Updated :
  • Lucknow, India

காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து கே.எல்.ராகுல் விலகுகவுள்ளதால் அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு அணியும் குறைந்தது 9 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், பிளே ஆப் சுற்றுக்காக ஒவ்வொரு அணியும் கடுமையாக போராடி வருகின்றன. கடந்த வாரம் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பவுண்டரிக்கு சென்ற பந்தை தடுக்க முயன்ற லக்னோ அணியின் கேப்டன் கே. எல். ராகுலுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மைதானத்தில் இருந்து உடனடியாக வெளியேறினார்.  மேலும்  புதன்கிழமை சென்னை அணிக்கு எதிரான் போட்டியில் ராகுல் விளையாடவில்லை அவருக்கு பதிலாக க்ருணால் பாண்டியா லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்டார்.

இந்த நிலையில் கே.எல்.ராகுல் நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அவருக்கு காலில் ஏற்பட்ட காயம் தீவிரம் அடைந்திருப்பதாக பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் சொதப்பி வரும் ராகுல் ரசிகர்களிடம் கடுமையான விமர்சங்களை பெற்று இருந்தார். மேலும் அவரது ஸ்ரைக் ரேட் மிகவும் மேதுவாக உள்ளதால் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர். இருப்பினும் ராகுல் பங்களிப்பு செய்யாவிட்டாலும், கேப்டனாக அவர் சிறப்பாக செயல்பட்டு ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.கே.எல்.ராகுல் விலகவுள்ளதால் லக்னோ அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த போட்டியை வழிநடத்திய க்ருணால் பாண்டியா லக்னோ அணியின் கேப்டனாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ஐபிஎல் குறித்து அனைத்து அப்டேட்டுகளை அறிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்

top videos

    மேலும் கே.எல்.ராகுல் இங்கிலாந்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியிலும்  விளையாட வாய்ப்பு இல்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு அறிவிக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனத்கட் காயத்தால் விளையாடுவது சந்தேகம் எழுந்துள்ள நிலையில் கே.எல்.ராகுலும் காயம் காரணமாக விலகி இருப்பதால் மாற்று வீரரை தேர்வு செய்ய பிசிசியின் தேர்வு குழு மிக தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    First published:

    Tags: IPL 2023, KL Rahul