முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற லக்னோ அணி… ஆர்.சி.பி. ரசிகர்கள் ஏமாற்றம்…

IPL 2023 : கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற லக்னோ அணி… ஆர்.சி.பி. ரசிகர்கள் ஏமாற்றம்…

வெற்றியை கொண்டாடும் லக்னோ அணி வீரர்கள்

வெற்றியை கொண்டாடும் லக்னோ அணி வீரர்கள்

லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் 18 ரன்களும், தீபக் ஹூடா 9 ரன்களும், க்ருணல் பாண்ட்யா ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர்

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ அணி கடைசிப் பந்தில் 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் எடுத்தது. அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் டூப்ளசிஸ் மற்றும் விராட் கோலி ஆகியோர் களத்தில் இறங்கினர். 11.3 ஓவரில் அணி 96 ரன்களை எடுத்திருந்தபோது விராட் கோலி 61 ரன்னில் வெளியேறினார். 44 பந்துகளை எதிர்கொண்ட கோலி 4 பவுண்டரியும், 4 சிக்சர்களையும் அடித்திருந்தார்.

ஒரு விக்கெட் விழுந்தபோது டூப்ளசிசுடன் மேக்ஸ்வெல் இணைந்து அதிரடியாக ரன்களை குவித்தார். இதனால் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. 29 பந்துகளை எதிர்கொண்ட மேக்ஸ்வெல் 6 சிக்சர் மற்றும் 3 பவுண்டரியுடன் 59 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். கேப்டன் டூப்ளசிஸ் 79 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் கடைசிவரை களத்தில் நின்றார். 2 ஆவது விக்கெட்டிற்கு டூப்ளசிசும் – மேக்ஸ்வெல்லும் 50 பந்துகளுக்கு 115 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 212 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி லக்னோ அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர்.

தொடக்க வீரர் கைல் மேயர்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். கேப்டன் கே.எல்.ராகுல் 18 ரன்களும், தீபக் ஹூடா 9 ரன்களும், க்ருணல் பாண்ட்யா ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர். சிக்சர் மழை பொழிந்த மார்கஸ் ஸ்டாய்னிஸ் 30 பந்தில் 5 சிக்சர் 6 பவுண்டரியுடன் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் நிகோலஸ் பூரன் 19 பந்தில் 7 சிக்சர் 4 பவுண்டரியுடன் 62 ரன்கள் அடித்து, பெங்களூரு அணி ரசிகர்களை கலங்கடித்தார். அவருடன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்த ஆயுஷ் பதோனி 24 பந்துகளில் 30 ரன்கள் எடுக்க கடைசி ஓவரில் லக்னோ அணி வெற்றி பெற 5 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரை ஹர்ஷல் படேல் வீச முதல் பந்தில் 1 ரன் எடுக்கப்பட்டது. அடுத்த பந்தில் மார்க் வுட் போல்டாகி வெளியேறினார். 3 ஆவது பந்தில் 2 ரன்களும், 4 ஆவது பந்தில் 1 ரன்னும் எடுக்கப்பட்டபோது ஸ்கோர் சமம் ஆனது.

5 ஆவது பந்தில் உனாட்கட் டூப்ளசிசிடம் கேட்ச்கொடுதது வெளியேற, கடைசி பந்தில் 1 ரன் எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டபோது, பைஸில் 1 ரன்னை ஆவேஷ் கான் எடுக்க லக்னோ அணி வெற்றி பெற்றது.

First published:

Tags: IPL, IPL 2023