பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் கவுதம் காம்பீர் ஆக்ரோஷமாக ரசிகர்களை நோக்கி விரலை காட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்தப்போட்டியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன் கோலி 61 எடுத்து சிறப்பான தொடக்கம் கொடுத்தார். இறுதிக்கட்ட ஓவர்களில் மேக்ஸ்வெல் -டூபிளசிஸ் அதிரடியில் மிரட்ட அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது. மேக்ஸ்வெல் 59 , டூபிளசிஸ் 79 ரன்களை எடுத்தனர்.
இதனையடுத்து களமிறங்கிய லக்னோ அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. அந்த அணி 23 ரன்களுக்கு 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முதல் பாதியில் ஆர்சிபி அணியின் கை ஓங்கி இருந்து. ரசிகர்கள் ஆர்சிபி என உற்சாகமாக முழக்கமிட்டனர். இரண்டாம் பாதியில் ஆட்டல் தலைகீழாக மாறியது. மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் நிகோலஸ் பூரன் ஜோடி, அதிரடியாக ஆடி, பெங்களூரு பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இருவரும் அரைசதம் விளாசி, லக்னோ அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இருந்த போதும் கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
Also Read: சிஎஸ்கே-வில் ரஹானே.. தோனி என்ன லாஜிக் இது - சேவாக் விளாசல்
அந்த ஓவரை வீசிய ஹர்ஷல் படேல் 5 பந்துகளில் 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனால், கடைசிப் பந்தில் ஒரு ரன் தேவை என்ற நிலையில், கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்ததால் இப்போட்டி விறுவிறுப்பின் உச்சம் தொட்டது. கடைசிப் பந்தை ஹர்ஷல் படேல் நேர்த்தியாக டாட் பாலாக வீசிய போதும், அதைப் பிடித்து ரன்-அவுட் செய்ய விக்கெட்கீப்பர் தினேஷ் கார்த்திக் தவறினார். அதற்குள் லக்னோ வீரர்கள் ஒரு ரன் ஓடியதால், அந்த அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.
Gambhir The Real OG 🤫🔥 pic.twitter.com/0T5phOeA9c
— Remo Mama (@RemoMowa) April 10, 2023
இதனையடுத்து மைதானத்திற்கு லக்னோ வீரர்கள் அந்த அணியின் மெண்டார் கவுதம் கம்பீர் ஆகியோர் வந்தனர். அப்போது மைதானத்தில் இருந்த ரசிகர்களை நோக்கி கம்பீர் தனது விரலை வாயில் வைத்து சைலன்ஸ் என்பது போது சிக்னல் காட்டினார். பிளேயர்ஸே அமைதியா போகும் இவரு மெண்டார் இவர் ஏன் இவ்ளோ ஆக்ரோஷ்மாக இருக்கார் என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். கம்பீர் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gautam Gambhir, IPL 2023, Virat Kohli