முகப்பு /செய்தி /விளையாட்டு / Mohsin khan Story : “மீண்டும் கிரிக்கெட் விளையாடுவேன்னு நம்பிக்கையே இல்லை”- மோசின் கான் உருக்கம்

Mohsin khan Story : “மீண்டும் கிரிக்கெட் விளையாடுவேன்னு நம்பிக்கையே இல்லை”- மோசின் கான் உருக்கம்

மோஷின் கான்

மோஷின் கான்

விளையாட்டு வீரர்களின் கரியரில் காயம் தான் மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

  • Last Updated :
  • Chennai, India

கண் முன்னே கனவுகள் எல்லாம் நொறுக்கிப்போக.. இனி கிரிக்கெட்டே விளையாட முடியாது என்ற நிலையில் இருந்து பீனிக்ஸ் பறவையாக மீண்டும் கிரிக்கெட் வானில் சிறகடிக்க தொடங்கியுள்ளார் மோசின் கான். வலுவான மும்பைக்கு எதிராக மாஸாக கடைசி ஓவரை வீசி மிரட்டியிருக்கிறார். மும்பைக்கு எதிரான போட்டியில் பரபரப்பான கடைசி ஓவரை பதற்றம் இல்லாமல் வீசி லக்னோவுக்கு வெற்றியை தேடித் தந்தார் அந்த லெப்ட் ஆர்ம் பவுலர். யார் சாமி இவன்.. என கிரிக்கெட் உலகமே இரவெல்லாம் உச்சரித்துக் கொண்டிருந்தது மோசின் கானின் பெயரை.

அதிரடி-க்கு பெயர் போன ஐபிஎல் கிரிக்கெட்டில் கடைசி ஓவரில் 10 ரன்களை கட்டுப்படுத்தி வெற்றி பெறுவது எல்லாம் சாதாரண காரியம் இல்லை. ஒரு பவுண்டரி போனாலும் மேட்ச் தலைகீழாகிவிடும். கைவசம் 5 விக்கெட்டுகளை வைத்திருக்கும் அணி விக்கெட்டே போனாலும் சரி விளாசலை கையில் எடுங்கள் என சொல்லித்தான் அனுப்பும். களத்தில் இருக்கும் இண்டர்நேஷ்னல் ப்ளேயர்களுக்கு சூழல் குறித்து சொல்லவா வேண்டும். வாள்வீச தயாராகத்தான் இருப்பார்கள். அப்படியான இக்கட்டான நேரத்தில் இளம்வீரரான மோசின் 2 டாட் பால்கள்.. நோ பவுண்டரி.. என பேட்ஸ்மேன்களுக்கு தண்ணிக்காட்டினார்.

2022 ஐபிஎல் சீசனில் 9 போட்டிகளில் 14 விக்கெட்களை வீழ்த்தி கவனம் ஈர்த்தார். விளையாட்டு வீரர்களின் கரியரில் காயம் தான் மிகப்பெரிய சவாலாக இருக்கும். காயங்கள் நிறைய விளையாட்டு வீரர்களின் கேரியரை காலி செய்திருக்கிறது. விதி மோசின் கானை மட்டும் சும்மா விடுமா என்ன. ரத்த நாளங்களில் ஏற்பட்ட கட்டிகளால் அவரால் கிரிக்கெட் முடியாத சூழல் ஏற்பட்டது.

மோசின் கான் சிகிச்சையில் இருந்தார். அவருக்கு  ரத்த நாளங்களில் உள்ள கட்டிகளை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். கிரிக்கெட்டில் கேரியரை தொடங்கும்போது காயங்கள் கனவுகளை இரையாக்குவதை கண்டு வருந்தினார். அவரால் கைகளை கூட உயர்த்த முடியாத நிலை இருந்தது.

போட்டிக்கு பின்னர் தன்னுடைய காயங்கள் குறித்து பேசிய மோசின் கான், “ எனக்கு ஏற்பட்ட காயங்கள் எந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கு வரக்கூடாது என வேண்டிக்கொள்கிறேன். என்னுடைய இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டது. அறுவை சிகிச்சைக்கு முன்பும் அதன்பின்னும் நான் கடுமையாக பாதிக்கப்பட்டேன். என் வாழ்வில் அது கடினமான நாட்கள். நான் மீண்டும் கிரிக்கெட் விளையாடுவேன் என்ற நம்பிக்கையே எனக்கு இல்லை. ஒரு கட்டத்தில் என்னால் என் கைகளை உயர்த்த முடியவில்லை. நேராக கூட என் கைகளை நீட்ட முடியாது.

இதையும் படிங்க : ஐசியுவில் தந்தை... அபாரமாக பந்துவீசிய மோசின் கான்... ஐபிஎல் நெகிழ்ச்சி..!

top videos

    அது முழுக்க முழுக்க மருத்துவம் சார்ந்த பிரச்னையாக இருந்தது. நான் மிகவும் அச்சத்துடன் இருந்தேன். நான் ஒருமாதம் தாமதமாக வந்திருந்தால் என்னுடைய கைகளையே துண்டிக்கும் நிலை வந்திருக்கும் என டாக்டர் கூறினார். லக்னோ அணி நிர்வாகம் எனக்கு பக்க பலமாக இருந்தது. ”என்றார். சோதனைகளை எல்லாம் முறியடித்து மும்பைக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் மிரட்டி மக்கள் மனங்களை வென்றுள்ளார் மோசின் கான்.

    First published:

    Tags: Cricket, IPL 2023, LSG, Tamil News