முகப்பு /செய்தி /விளையாட்டு / 115 மீட்டர் தூரத்திற்கு சிக்சர் அடித்த டூப்ளசிஸ்… கவனம் ஈர்க்கும் வீடியோ

115 மீட்டர் தூரத்திற்கு சிக்சர் அடித்த டூப்ளசிஸ்… கவனம் ஈர்க்கும் வீடியோ

டூப்ளசிஸ்

டூப்ளசிஸ்

20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த பெங்களூரு அணி 212 ரன்களை குவித்தது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணியின் கேப்டன் டூப்ளசிஸ் 115 மீட்டர் தூரத்திற்கு சிக்சர் அடித்துள்ளார். நடப்பு சீசனில் அடிக்கப்பட்ட நீண்ட தூர சிக்சராக இது அமைந்தது. டூப்ளசிஸ் அடித்த சிக்சர் தொடர்பான வீடியோவை ஐபிஎல் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளது. இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணியும், லக்னோ அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பவுலிங்கை தேர்வு செய்தார்.

இதைடுத்து களத்தில் இறங்கிய பெங்களூரு அணியின் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி ரன்களை எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த பெங்களூரு அணி 212 ரன்களை குவித்தது. கேப்டன் டூப்ளசிஸ் 46 பந்துகளில் 79 ரன்களையும், விராட் கோலி 44 பந்துகளில் 61 ரன்களையும் எடுத்தனர்.  அதிரடி காட்டிய மேக்ஸ்வெல் 29 பந்துகளில் 59 ரன்களை குவித்தார்.

பெங்களூரு அணியின் பேட்டிங்கின்போது 15 ஆவது ஓவரை லக்னோ அணியின் பிஷ்னோய் வீசினார். 3 ஆவது பந்தை சிக்ருக்கு அனுப்பிய டூப்ளசிஸ் அடுத்த பந்தை, 115 மீட்டர் தூரத்திற்கு அனுப்பி இமாலய சிக்சர் ஒன்றை அடித்தார். நடப்பு ஐபிஎல் சீசனில் நீண்ட தூரத்திற்கு அடிக்கப்பட்ட சிக்சராக இது அமைந்தது. இந்த வீடியோவை ஐபிஎல் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளது.

First published:

Tags: IPL, IPL 2023