ஐபிஎல் தொடரில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணி கடந்த ஐபிஎல் 2022ம் தொடரில் 7வது இடத்தை பிடித்தது. இந்த ஆண்டு எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியுள்ளது.
கொல்லத்தா அணிக்கு மிகவும் பின்னடைவாக பார்க்கப்படுவது கேப்டனாக செயல்பட்டு வந்த ஷ்ரேயாஸ் ஐயரின் காயம். இது அந்த அணிக்கு மிகப்பெரிய பலவீனமாக பார்க்கப்படுகிறது ஏன் என்றால் ஸ்ரேயஸ் ஐயருக்கு கேப்டன் செயல்பாட்டில் உள்ள அனுபவமே காரணம். டெல்லி அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வந்தவர் அந்த அணியை நன்றாக வழிநடத்தி சென்றார்.
பின்னர் கொல்கத்தா அணிக்கு விளையாடிய அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது. கடந்த சீசனில் சரியாக விளையாடாத கொல்கத்தா அணி இந்த முறை எப்படியாவது கோப்பையை வென்று விட வேண்டும் என பல்வேறு வியூகங்களை வகுத்து வந்தாலும் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் காயம் அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
கேப்டன் ஸ்ரேயர் ஐயர் காயம் காரணமாக கொல்கத்தா அணிக்கு நிதிஷ் ராணா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். உள்நாட்டு கிரிக்கெட்டில் டெல்லி அணிக்கு கேப்டனாக இருந்தாலும் , மிகப்பெரிய தொடரில் அவரது கேப்டன்ஷிப் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அதேபோல் அந்த அணிக்கு புதிய பயிற்சியாளராக சந்திரகாந்த் பண்டிட் நியமிக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. மற்ற அணிகள் வெளிநாட்டு பயிற்சியாளரை நியமனம் செய்துள்ள நிலையில் கொல்கத்தா அணி ரஞ்சி போட்டியில் ஆதிக்கம் செலுத்திய இந்தாண்டு மத்திய பிரதேச அணி ரஞ்சி கோப்பை வெல்ல காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடதக்கது.
கொல்கத்தா அணிக்கு ஆண்ட்ரே ரஸ்ஸல், வருண் சக்ரவர்த்தி மற்றும் லாக்கி பெர்குசன் போன்ற வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இவர்கள் சில போட்டிகளில் விளையாடாமல் கூட போகலாம் என்பதால் அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும் கொல்கத்தா அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான ரஸல் உடற்தகுதி குறித்தும் அணி நிர்வாகம் கவனித்து வருகிறது.
பேட்டிங்கில் நிதிஷ் ராணா,ஜெகதீசன்,லிட்டன் தாஸ், மந்தீப் சிங்,ரஹ்மானுல்லா குர்பாஸ், வீரர்கள் இருந்தாலும் கொல்கத்தா அணிக்கு வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன் ,ஷர்துல் தாக்கூர், ஷாகிப் அல் ஹசன் உள்ளிட்ட ஆல்ரவுண்டர்கள் பலமாக உள்ளனர்.
பந்துவீச்சை பொறுத்தவரை லாக்கி பெர்குசன், உமேஷ் யாதவ், டிம் சவுதி உள்ளிட்டோர் வேகப்பந்து வீச்சில் கொல்கத்தா அணிக்கு ஆறுதலாக உள்ளனர். இவர்களின் செயல்பாட்டை பொறுத்தே கொல்கத்தா அணிக்கு வெற்றி அமையும்.
கொல்கத்தா அணி விவரம்:
நிதிஷ் ராணா (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், லாக்கி பெர்குசன், உமேஷ் யாதவ், டிம் சவுதி, ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, அனுகுல் ராய், ரிங்கு சிங், என். ஜெகதீசன், வைப் ஜகதீசன், சர்மா, டேவிட் வைஸ், குல்வந்த் கெஜ்ரோலியா, லிட்டன் தாஸ், மந்தீப் சிங், ஷாகிப் அல் ஹசன்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IPL 2023