முகப்பு /செய்தி /விளையாட்டு / ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் கே.எல். ராகுல்… லக்னோ அணிக்கு பின்னடைவு…

ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் கே.எல். ராகுல்… லக்னோ அணிக்கு பின்னடைவு…

லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல்

லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல்

பேட்ஸ்மேன் என்ற அடிப்படையில் லக்னோ அணிக்கு பெரிய அளவில் ராகுல் பங்களிப்பு செய்யாவிட்டாலும், கேப்டனாக அவர் சிறப்பாக செயல்பட்டு ரசிகர்களின் பாராட்டை பெற்றார்

  • Last Updated :
  • Tamil Nadu, India

காயத்தால் அவதிப்பட்டு வரும் லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் அந்த அணிக்கு பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கூறியுள்ளனர். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு அணியும் குறைந்தது 9 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், பிளே ஆப் சுற்றுக்காக ஒவ்வொரு அணியும் கடுமையாக போராடி வருகின்றன. நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியின் போது, லக்னோ மற்றும் பெங்களூரு அணிகள் மோதின.

இந்த போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. பெங்களூர் அணி பேட்டிங் செய்யும்போது பவுண்டரிக்கு சென்ற பந்தை தடுக்க முயன்ற லக்னோ அணியின் கேப்டன் கே. எல். ராகுலுக்கு காயம் ஏற்பட்டது.  இதையடுத்து அவர் மைதானத்தில் இருந்து உடனடியாக வெளியேறினார். இந்த போட்டியில் பெங்களூர் அணி 126 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.  இதனால் லக்னோ எப்படியும் வெற்றி பெற்று விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே, காயம் காரணமாக கேஎல் ராகுல் தொடக்க வீரராக களத்தில் இறங்கவில்லை. 9 விக்கெட்டுகள் விழுந்த பின்னரே அவர் மைதானத்திற்குள் வந்தார். 19.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த லக்னோ அணி 108 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

top videos

    இந்த நிலையில் கே.எல்.ராகுல் நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அவருக்கு காலில் ஏற்பட்ட காயம் தீவிரம் அடைந்திருப்பதாக பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. பேட்டிங் என்ற அடிப்படையில் லக்னோ அணிக்கு பெரிய அளவில் ராகுல் பங்களிப்பு செய்யாவிட்டாலும், கேப்டனாக அவர் சிறப்பாக செயல்பட்டு ரசிகர்களின் பாராட்டை பெற்றார். இந்நிலையில் அவரது விலகல் லக்னோ அணிக்கு பின்னடைவாக அமையும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறியுள்ளனர். தற்போது ராகுலுக்கு பதிலாக க்ருணல் பாண்டியா அணியின் கேப்டனாக செயல்படுகிறார்.

    First published:

    Tags: IPL, IPL 2023