முகப்பு /செய்தி /விளையாட்டு / வேத பாடசாலை மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடிய கொல்கத்தா அணி வீரர்… கவனம் பெறும் வீடியோ

வேத பாடசாலை மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடிய கொல்கத்தா அணி வீரர்… கவனம் பெறும் வீடியோ

வெங்கடேஷ் ஐயர்

வெங்கடேஷ் ஐயர்

கிரிக்கெட் மீது மக்கள் வைத்திருக்கும் அன்பு நம்ப முடியாத அளவுக்கு இருக்கிறது. – வெங்கடேஷ் ஐயர்

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்ஸ்மேன் வெங்கடேஷ் ஐயர், காஞ்சிரபுரத்தில் வேத பாடசாலை மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடினார். இது  தொடர்பாக இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டிருக்கும் வீடியோ கவனம் பெற்று வருகிறது. ,இந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கி இருந்தபோதிலும் கிரிக்கெட் விளையாட்டு நாடு முழுவதும் நீக்கமற நிறைந்துள்ளது. சாமானியர்கள் முதல் விஐபிக்கள் வரை தங்களுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் படப்பிடிப்பு இடைவேளைகளின்போது நடிகர்களும், சினிமா குழுவினரும் கிரிக்கெட் விளையாடுவதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர் காஞ்சிபுரத்தில் வேத பாடசாலை மாணவர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடினார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ லைக்ஸ்களை குவித்து வருகிறது.


சிறுவர்கள் ஒருவர் பின் ஒருவராக வெங்கடேஷுக்கு பந்துகளை வீச அவர் பவுண்டரிக்கு அதை விரட்டுகிறார். அவரது  பேட்டிலிருந்து சில சிக்சர்களும் பறக்கின்றன. இதனை அங்குள்ள ஆசிரியர்கள் ரசித்துப் பார்க்கின்றனர். இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவை வெளியிட்டு, கிரிக்கெட் மீது மக்கள் வைத்திருக்கும் அன்பு நம்ப முடியாத அளவுக்கு இருக்கிறது. காஞ்சிபுரத்தில் வேத பாடசாலை மாணவர்களுடன் நேரம் செலவிட்டேன். இந்த தருணம் அற்புதமாக அமைந்தது. என்று கூறியுள்ளார்.

First published:

Tags: IPL, IPL 2023