விராட் கோலி ஆர்.சி.பி. அணியில் இருந்து விலகி வேறொரு ஐபிஎல் அணிக்கு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், அந்த அணி எது என்பது குறித்தும் கூறியுள்ளார். அவரது ட்விட்டர் பதிவு ஐபிஎல் மற்றும் விராட் கோலி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில் பெங்களூரு அணி தோல்வியடைந்து ப்ளே ஆஃப் சுற்றில் விளையாடும் வாய்ப்பை இழந்தது.
முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் விராட் கோலி மட்டுமே பொறுப்புடன் விளையாடி 61 பந்துகளில் 101 ரன்களை எடுத்தார். அடுத்து பேட்டிங் செய்த குஜராத் அணி 19.1 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. இந்த மேட்ச்சில் கூடுதலாக 15-20 ரன்கள் எடுத்திருந்தால் பெங்களூரு அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். ஆர்சிபி தோல்வியடைந்துள்ள நிலையில் விராட் கோலி அடுத்த ஆண்டு வேறு அணிக்கு மாற வேண்டும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க - IPL 2023 : ஐபிஎல் ப்ளே ஆஃப் சுற்று போட்டிகளின் அட்டவணை… விதிமுறைகள் என்ன தெரியுமா?
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் தலைநகருக்கு விராட் கோலி செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் கோலி டெல்லி கேபிடல்ஸ் அணியில் விளையாட வேண்டும் என்று கூறியிருப்பது தெளிவாகியுள்ளது.
Time for VIRAT to make the move to the capital city…! #IPL
— Kevin Pietersen🦏 (@KP24) May 22, 2023
இந்த பதிவுக்கு ஆதரவு தெரிவித்து ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர். ஐபிஎல் தொடரில் மொத்தம் 237 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 7,263 ரன்களை எடுத்துள்ளார். இவற்றில் 7 சதங்களும், 50 அரைச் சதங்களும் அடங்கும். நடப்பு சீசனில் கோலி 639 ரன்களை 14 மேட்ச்சுகளில் குவித்துள்ளார். இவற்றில் 2 சதங்களும், 6 அரைச்சதங்களும் அடங்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.