முகப்பு /செய்தி /விளையாட்டு / Jio Cinema : தோனி தரிசனம்.. த்ரில் மேட்ச்.. 2.2 கோடி பார்வையாளர்களை ஈர்த்து ஜியோ சினிமா புதிய சாதனை

Jio Cinema : தோனி தரிசனம்.. த்ரில் மேட்ச்.. 2.2 கோடி பார்வையாளர்களை ஈர்த்து ஜியோ சினிமா புதிய சாதனை

சிஎஸ்கே Vs ராஜஸ்தான் போட்டி

சிஎஸ்கே Vs ராஜஸ்தான் போட்டி

ஜியோ சினிமா இலவசமாக ஸ்ட்ரீமில் இதுவரை இல்லாத பார்வையாளர்களின் சாதனையை சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகளின் ஆட்டம் தொட்டுள்ளது.

  • Last Updated :
  • Chennai, India

2023 ஐபிஎல் தொடரின் மிக திரில்லிங்கான ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது.

டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, பந்து வீச்சை முதலில் தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி வீரர்கள் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்ததது. அந்த அணிக்கு அதிகபட்சமாக, ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்தார்.

பின்னர், 176 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய சென்னையில் தொடக்க வீரர் கெய்க்வாட் சொற்ப ரன்களில் ஆட்டமிழவ்தார். பின்னர், கான்வே மற்றும் ரஹேனா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல பார்ட்னர்ஷிப்பை தந்தனர். பின்னர், அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன. இதையடுத்து களத்தில் இணைந்த ரவிந்திரா ஜடேஜா – தோனி இணை ராஜஸ்தான் பந்து வீச்சை சிக்சர்களை நோக்கி பறக்க விட்டது. கடைசி 5 ஓவரில் சென்னை அணி வெற்றி பெற 63 ரன்கள் தேவைப்பட்டபோது, இருவரும் சிறப்பாக விளையாடி வெற்றியின் விளிம்பு வரை அணியை கொண்டு சென்றனர்.

கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டபோது தோனியால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 3 ரன் வித்தியாசத்தில் சென்னை அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது. இந்த போட்டியானது கடைசி பந்து வரை கொண்டு சென்று ரசிகர்களுக்கு திரில் விருந்தாக அமைந்தது. மைதானத்தில் உள்ள ரசிகர்கள் மட்டுமல்லாது, திரையிலும் மிக கணிசமான அளவில் இந்த போட்டிகளை ரசிகர்கள் கண்டுகளித்தனர்.

இந்தாண்டு ஐபிஎல் அனைத்து போட்டிகளையும் ஜியோ சினிமா இலவசமாக ஸ்ட்ரீம் செய்யும் நிலையில், இதுவரை இல்லாத பார்வையாளர்களின் சாதனையை சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகளின் ஆட்டம் தொட்டுள்ளது. இந்த போட்டியை சுமார் 2.2 கோடி பேர் ஜியோ சினிமா ஸ்ட்ரீமில் கண்டு களித்துள்ளனர்.

இதற்கு முன்பு டிஸ்னி-ஹாட்ஸ்டாரில் ரசிகர்கள் பார்த்ததை காட்டிலும் ஜியோசினிமா பார்வையாளர்கள் எண்ணிக்கை மிக கணிசமாக அதிகரித்துள்ளது. தொடர்ச்சியாக புதிய சாதனைகளை இந்த ஐபிஎல் தொடரில் ஜியோசினிமா செய்து வருகிறது. அதன்படி, டிஸ்னி-ஹாட்ஸ்டாரில் அதிகபட்ச பார்வையாளர்கள் எண்ணிக்கை 2019 ஐபிஎல் இறுதிப்போட்டியாகும். இதை 1.86 கோடி பேர் ஸ்ட்ரீமிங் தளத்தில் பார்த்துள்ளனர். இந்த சாதனையை நேற்றைய போட்டியில் முறியடித்து 2.2 கோடி பார்வையாளர்கள் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இதையும் படிங்க: ஐபிஎல் தொடரில் 600 பவுண்டரி… புதிய சாதனை படைத்த டேவிட் வார்னர்

top videos

    ஜியோசினிமா இலவச ஸ்ட்ரீமிங் மூலம் 2023 ஐபிஎல் முதல் வாரத்தில் அகில இந்திய அளவில் பார்வையாளர்கள் எண்ணிக்கை 375 கடந்து பெரும் சாதனை படைத்துள்ளது. முதல் வார இறுதி நாள்களில் மட்டும் 147 கோடி பேர் போட்டிகளை ஜியோசினிமாவில் பார்த்துள்ளனர். மேலும், ஜியோசினிமா தொடரின் தனது முதல் வாரத்திலேயே 23 விளம்பர ஸ்பான்சர்களை ஈர்த்து ஒப்பந்தம் செய்து சாதனை படைத்துள்ளது.

    First published:

    Tags: CSK, IPL 2023, Jio, Rajasthan Lok Sabha Elections 2019