2023 ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் ஜியோ சினிமா இலவசமாக ஸ்ட்ரீம் செய்யும் நிலையில், போட்டிகளில் நடைபெற்ற முதல் 5 வாரத்தில் புதிய ஸ்ட்ரீமிங் சாதனையை ஜியோ சினிமா படைத்துள்ளது. ஒரு போட்டிக்கு ஒரு பார்வையாளர் சராசரியாக 60 நிமிடம் என்ற கணக்கில் முதல் 5 வாரத்தில் 1,300 கோடி பார்வைகள் என பெரும் சாதனை ஜியோ சினிமா டிஜிட்டல் தளத்தில் நிகழ்ந்துள்ளது. இது தொலைகாட்சி பார்வையாளர்கள் எண்ணிக்கையை விட இரண்டு மடங்காகும்.
இது தொடர்பாக Viacom18-விளையாட்டு பிரிவு சிஇஓ அணில் ஜெயராஜ் கூறுகையில், ஒவ்வொரு வாரமும் ஜியோ சினிமா பார்வையாளர்கள் எண்ணிக்கை கணிசமாக கூடி வருகிறது. இதன்மூலம் பார்வையாளர்கள் டிஜிட்டல் தளத்தை விரும்பி பார்க்க வருவது உறுதிபட தெரிகிறது. எங்கள் ஸ்பான்சர்கள் மற்றும் விளம்பரதாரர்கள் டிஜிட்டல் மூலம் ஜியோ சினிமாவில் டெலிவரி மற்றும் முதலீட்டின் மீதான வருமானம் குறித்து உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.
விளையாட்டு ஸ்ட்ரீமிங் வரலாற்றில் சாதனையாக ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளின் ஆட்டம் தொட்டுள்ளது. இந்த போட்டியை சுமார் 2.4 கோடி பேர் ஜியோ சினிமா ஸ்ட்ரீமில் கண்டு களித்துள்ளனர்.இதற்கு ஐந்து நாள்களுக்கு முன் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் போட்டியை 2.2 கோடி பேர் பார்த்ததே சாதனையாக இருந்தது. அடுத்தடுத்து பார்வையாளர்களின் உச்சம் தொட்டு ஜியோ சினிமா தொடக்க ஆண்டிலேயே சாதனை படைத்துள்ளது.
இதுவரை நடைபெற்ற எந்த நிகழ்வுகளுக்கும் இல்லாத அளவிற்கு அதிக அளவிலான விளம்பரதாரர்கள் மற்றும் ஸ்பான்சர்களை ஜியோ சினிமா இந்தாண்டு ஒப்பந்தம் செய்துள்ளது. 2023 ஐபிஎல் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளமான ஜியோ சினிமா டிரீம் 11, ஜியோ மார்ட், போன்பே, டியாகோ இவி, அப்பி பிஸ், இடி மனி, கேஸ்ட்ரால், டிவிஎஸ், ஓரியோ, பிங்கோ, ஸ்டிங், ஏஜியோ, ஹேயர், ரூபே, லூயிஸ் பிலிபே ஜீன்ஸ், அமேசான், ரேபிடோ, அல்ட்ரா டெக் சிமென்ட், பூமா, கம்லா பசந்த், கிங்க்பிஷர் பவர் சோடா, ஜிந்தால் பேந்தர் டிஎம்டி ரேபார் மற்றும் இன்டீட் ஆகியோரை ஸ்பான்சர்களாக கொண்டுள்ளது.
ஜியோ சினிமாவில் ஒப்பந்தம் பதிவு செய்த விளம்பரதாரர்களின் எண்ணிக்கையும் ஒரு புதிய சாதனையாகும். டிஜிட்டல் தளத்தில் விளம்பர வருவாயும் கடந்த ஆண்டை விட கணிசமாக அதிகரித்துள்ளது. போஜ்புரி, பஞ்சாபி, மராத்தி மற்றும் குஜராத்தி உள்ளிட்ட பிராந்திய மொழியில் சேவை வழங்குகிறது. மல்டி-கேம், 4K மற்றும் ஹைப் மோட் போன்ற டிஜிட்டல்-ஒன்லி அம்சங்களையும் பார்வையாளர்கள் அனுபவிப்பதால், டிஜிட்டல் அலைவரிசையில் சேரும் பிராண்டுகளின் பட்டியல் மேலும் வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இன்ஸ்டாகிராமில் விராட் கோலியை சீண்டும் ஆப்கன் வீரர் நவீன் உல் ஹக்… ரசிகர்கள் கடும் விமர்சனம்
நடப்பு சாம்பியன் குஜராத் டைடான்ஸ், 5 முறை சாம்பியன்ஸ் மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, டெல்லி கேப்பிடஸ் ஆகிய அணிகள் ஜியோசினிமாவுடன் எக்ஸ்குளூசிவ் பார்ட்னர்ஷிப் செய்துள்ளன. கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின், இந்திய ரசிகர்களால் பெரிதும் கொண்டாடும் நட்சத்திரம் எம்எஸ் தோனி, நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ், இந்திய பெண்கள் அணியின் துணை கேப்டன் ஸ்மிரிதி மந்தானா ஆகியோரும் ஜியோ சினிமாவுடன் கைகோர்த்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IPL 2023, Jio, Reliance Jio