ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேரலையை இலவசமாக வழங்கி வரும் ஜியோ சினிமா புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது. முந்தைய தொடர்களில் இல்லாத வகையில் நடப்பு ஐபிஎல் சீசனை ஜியோ சினிமா இலவசமாக நேரலையாக ஒளிபரப்பு செய்து வருகிறது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த இலவச சேவையில் குறைந்த வீடியோ கிளாரிட்டி முதல் 4K தொழில்நுட்பம் வரையில் அனைத்தும் சிறப்பாக வழங்கப்படுகின்றன. ஆங்கிலம், இந்திஹயடன் அந்தந்த மொழிகளில் வர்ணனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் ஜியோ சினிமாவில் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரை நேரலையாக ஒளிபரப்பு செய்ததில் ஜியோ சினிமா புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சராசரியாக ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் குறைந்தது ஜியோ சினிமா தளத்தில் ஒரு மணி நேரத்தை செலவிடுகின்றனர். இந்த தகவலை Broadcast audience research council எனப்படும் பார்க் அமைப்பு வெளியிட்டுள்ளது. ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்டு 5 வாரங்களுக்குள்ளாக 1300 கோடி வீடியோ வியூஸ்களை எட்டியிருப்பதாக ஜியோ நிறுவனம் சமீபத்தில் தகவல் தெரிவித்திருந்தது.
வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு ஜியோ தளத்திற்கு முன்னுரிமை அளிப்பதை இந்த புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு வாரமும் வாடிக்கையாளர்கள் ஜியோ சினிமா தளத்தை பார்ப்பது கணிசமாக அதிகரித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.