முகப்பு /செய்தி /விளையாட்டு / ’சென்னை அணிக்கு கேப்டனாக அடம்பிடிக்கிறார்...’- ஓ.பி.எஸ்ஸைக் கேலி செய்யும் ஜெயகுமார்..

’சென்னை அணிக்கு கேப்டனாக அடம்பிடிக்கிறார்...’- ஓ.பி.எஸ்ஸைக் கேலி செய்யும் ஜெயகுமார்..

ஓபிஎஸ் - சபரீசன்

ஓபிஎஸ் - சபரீசன்

சென்னை, மும்பை அணியின் போட்டியைக் காண வந்த ஓ.பன்னீர் செல்வத்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேலிசெய்துள்ளார்.

  • Last Updated :
  • Chennai, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பெற்றுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது.

இந்த போட்டியை காண, லோக்கேஷ் கனகராஜ், அனிருத், நயன்தாரா, நடிகர் தனுஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் வந்திருந்தனர். இந்த போட்டியை காண முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் வந்திருந்தார். அப்போது அவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனை போட்டியின் இடையில் சந்தித்து பேசியுள்ளார். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில் சேப்பாக்கம் மைதானத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் மேட்ச் பார்க்கச் சென்றது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ‘சென்னை அணியின் கேப்டனாக தன்னை நியமிக்க வேண்டும் என்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்திடம் ஓ.பன்னீர் செல்வம் சண்டையிடுகிறார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

top videos

    அதேபோல சபரீசன் ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பு குறித்து, ‘பூனைக் குட்டி வெளியே வந்துவிட்டது’ என்று பதிவிட்டுள்ளார்.

    First published:

    Tags: CSK, Jayakumar, O Panneerselvam