16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 5-வது முறையாக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகுடம் சூடியது. இந்தப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய தமிழக வீரரான சாய் சுதர்சன் பேட்டிங்கில் மரண காட்டு காட்டினார். சூழலுக்கு ஏற்ப விளையாடிய சுதர்சன் 4 ரன்களில் சதத்தை தவறிவிட்டார். அந்தப்போட்டியில் 96 ரன்கள் குவித்து குஜராத் அணி 200 ரன்களை கடக்க உதவினார். ஃபனனில் சுதர்சன் ஆடிய இன்னிங்ஸ் அனைவரையும் கவர்ந்தது.
இந்நிலையில் சாய் சுதர்சன் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி அளித்த பிரத்யேக பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்துக்கொண்டார். சாய் சுதர்சன் பேசுகையில், “இறுதிப்போட்டி போன்ற முக்கியமான போட்டியில், அணிக்கு உறுதுணையாக இருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. குவாலிபையர் 1 போட்டியின் போதே 10-15 நிமிடங்கள் தோனியுடன் உரையாட வாய்ப்பு கிடைத்தது. அவருடைய ஆலோசனைகளை இனி வரும் போட்டிகளில் உபையோகப்படுத்த விரும்புகிறேன்” என்றார்.
மேலும், “சிஎஸ்கே-வுக்கு எதிராக இறுதிப்போட்டியில் விளையாடியது மகிழ்ச்சியாக இருந்தது. சிறு வயதில் இருந்தே சென்னை அணியையும், தோனியையும் பார்த்துதான் வளர்ந்தேன்.என்னுடைய இயல்பான திறமையை வெளிபடுத்துவதற்கான சூழலை ஹர்திக் பாண்டியா அமைத்து கொடுத்தார். அதுவே அனைவருக்கும் அவர்களது ஆட்டத்தை வெளிபடுத்த உதவியாக இருந்தது” என கூறினார்.
வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் என்னுடைய முழு திறமையையும் வெளிபடுத்த தான் முயற்சி செய்துள்ளேன். 96 ரன்களில் ஆட்டமிழந்தது சற்று வருத்தமாக இருந்தாலும் அணிக்கு என்ன தேவையோ அதை செய்ததில் மகிழ்ச்சியாக இருந்தது.
ஆரம்பத்தில் அணியின் ஸ்கோர் சற்று நிதானமாகவே உயர்ந்தது. சூழலுக்கு ஏற்ப விளையாடியதும், இடைவேளையில் அணியினர் கொடுத்த ஆலோசனைகளும் உதவியாக இருந்தது என தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CSK, Gujarat Titans, IPL 2023, MS Dhoni